பெற்றோர் பார்த்த மாப்பிள்ளை பிடிக்காததால் இளம் பெண் அலுவலகத்தின் 9வது மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் 27 வயதான ஆந்திராவை சேர்ந்த பிரியங்கா என்பரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரியங்காவிற்கு கடந்த வாரம் திருமணத்திற்காக அவரது பெற்றோர் மாப்பிளை பார்த்ததாக தெரிகிறது.இவருக்கு பெற்றோர் பார்த்த மாப்பிளை பிடிக்காததால் அலுவலக நேரம் முடிந்த பின்னர் அலுவலகத்தின் 9வது மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
தகவலறிந்த பொலிசார் ரத்த வெள்ளத்தில் காணப்பட்ட அவரின் உடனே மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டார்.ஆனால் இவர் செல்லும் வழியிலேயே பிரியங்கா உயிரிழந்தாதக கூறப்படுகின்றது.உடலை மீட்ட காவல்துறையினர் பிரேதப் பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.மேலும் மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றார்கள்.