மாமிசத்தை விட இதில் புரதம் அதிகம்! வியக்கவைக்கும் பலன்கள்!

754

நிலக்கடலையை தொடர்ந்து சாப்பிட்டு வருவதான் மூலம் எண்ணற்ற பலன்களை பெறலாம்.மாமிசம், முட்டையை விட இதில் புரதச்சத்து அதிகமுள்ளது, தினமும் நிலக்கடலையை சாப்பிட்டு வந்தால் ஆரோக்கியத்திற்கு தேவையான புரதம், கொழுப்பு, இரும்பு சத்து, விட்டமின் ஏ மற்றும் ஈ, கால்சியம், மக்னீசியம், பொட்டாசியம் உட்பட மற்ற தாதுப்பொருட்களின் பலன்களை பெறலாம்.

இதுதவிர மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.நிலக்கடலையில் நிறைவுறா கொழுப்பு உள்ளது, இது இன்சுலின் வேலையை அதிகரிப்பதால் டைப் 2 நீரிழிவு நோயை தடுக்கும் வல்லமை கொண்டது.ஓமேகா 3 மற்றும் குறைவான கெட்ட கொழுப்பு உள்ளதால் ரத்த நாளங்களை சுத்தமாக வைத்துக் கொள்ளும், எனவே மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகளை குறைக்கிறது.

பொதுவாக நிலக்கடலையை மூளைக்கான உணவு என்று அழைப்பார்கள், இதிலுள்ள விட்டமின் பி3 மூளையின் செயல்பாடுகளை அதிகரிப்பதுடன், ஞாபக சக்தியையும் மேம்படுத்துகிறது.உடலின் வளர்சிதை மாற்றத்துக்கு மிக முக்கியமானது புரதம், நிலக்கடலையில் புரதம் நிறைந்துள்ளது, 100 கிராம் அளவுள்ள நிலக்கடலையை சாப்பிட்டால் 28 கிராம் அளவில் புரதம் கிடைக்கிறது, இது எலும்புகளை வலுப்படுத்தும்.

இதிலுள்ள பையோட்டின்(Biotin) மற்றும் போலேட்(Folate) சத்துக்கள் தலைமுடியின் வளர்ச்சியை தூண்டுகின்றன, அதுமட்டுமின்றி விட்டமின் ஈ, மெக்னீசியம் சரும பளபளப்புக்கும், பருக்கள் வராமலும் தடுக்கிறது.வளரும் குழந்தைகளுக்கும், கருத்தரித்துள்ள பெண்களுக்கும், தாய்ப்பால் அளிக்கும் தாய்மார்களுக்கும் அருமருந்து. பல தொற்றுநோய்கள், ஹெபடைடிஸ், காசநோய் ஆகியவற்றிலிருந்து நம்மைக் காப்பாற்றிக்கொள்ளத் தேவையான எதிர்ப்பு சக்தியை வேர்க்கடலை அளிக்கிறது.