புதுமாப்பிள்ளையின் விபரீத முடிவு….
தமிழகத்தில் திருமணமான இரண்டு மாதத்தில் மனைவி தன்னை பிரிந்து தாய் வீட்டுக்கு சென்றதால் மனமுடைந்த கணவர் த ற்கொ லை செய்து கொண்டுள்ளார்.
வேலூரை சேர்ந்தவர் அஜய்குமார் (30). இவரும் அர்ச்சனா என்ற பெண்ணும் காதலித்து வந்த நிலையில் கடந்த மே மாதம் 8ஆம் திகதி வீட்டுக்கு தெரியாமல் ரகசிய திருமணம் செய்து கொண்டனர். இதன் பின்னர் தனிவீடு வாடகைக்கு எடுத்து காதல் தம்பதி தங்கி வந்தனர்.
திருமணமான மூன்றாவது நாளே அஜய்குமாருக்கு, அர்ச்சனா நடத்தை சந்தேகம் ஏற்பட்ட நிலையில் அவர் செல்போனில் இருந்த சில ஆண்கள் புகைப்படங்களை பார்த்து அது குறித்து ச ண்டை போட்டுள்ளார்.
இந்த நிலையில் கடந்த மாதம் அர்ச்சனாவுக்கு கர்ப்பபை சிகிச்சை நடந்த நிலையில் தனது தாய் வீட்டுக்கு ஓய்வெடுக்க சென்றார். ஆனால் மனைவி தன்னை விட்டு விலகுவதாக நினைத்த அஜய்குமார் கடந்த ஒரு வாரமாக மாமியார் வீட்டுக்குச் சென்று மனைவியைத் தன்னுடன் வருமாறு அழைத்திருக்கிறார்.
அப்போது முதலில் உன்னுடைய சந்தேகப் பார்வையை மாற்றிக்கொள் என்று அஜய்குமாரை மாமியார் கண்டித்திருக்கிறார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகிய அஜய்குமார் நேற்று இரவு முழுவதும் தூங்காமல் புலம்பியதோடு இன்று அதிகாலையில் தூ க்குப்போ ட்டு த ற்கொ லை செய்து கொண்டார்.
த ற்கொ லைக்கு முன்னர் அஜய்குமார் பதிவு செய்த வீடியோவில், நல்லா வாழ்ந்துகிட்டு இருந்த நேரத்துல அவ அம்மா வீட்டுக்கு போன பிறகு வேற மாதிரி பேசுறா. நம்ம வீட்டுக்குப் போகலாம்னு கூப்பிட்டும் வர மறுத்துட்டாள்.
மாமியாரும் அசிங்க அசிங்கமா பேசுறாங்க. ‘நீ எதுக்கு என் மகள்கிட்ட பேசுற, பிரிஞ்சிடு’ன்னு சொன்னாங்க. என் சாவுக்கு முழுக்க முழுக்க காரணம், என் மனைவி அர்ச்சனாவும், மாமியார் கவிதாவும் தான் என கூறியுள்ளார். சம்பவம் தொடர்பாக பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.