திருவள்ளூர்…..
திருவள்ளூர் அடுத்த பொன்னேரி சின்ன கவானம் ஜோதிலிங்கம் தெருவைச் சேர்ந்தவர் சஞ்சய். இவருக்கு 23 வயதில் துர்கா தேவி என்ற மகள் இருந்துள்ளார்.
துர்கா தேவி பொன்னேரியில் உள்ள தனியார் கார்மெண்ட்ஸ் நிறுவனத்தில் டெய்லராக வேலை பார்த்து வந்த நிலையில், கும்மிடிப்பூண்டியை சேர்ந்த இளைஞரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில், இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு காதல் முறிந்ததாக தெரிகிறது.
இதனால் மன வேதனையில் இருந்து வந்த துர்காதேவி நேற்று பொன்னேரியில் இருந்து சென்னை சென்ட்ரல் செல்லும் மின்சார ரயிலில் பயணித்துள்ளார்.
அப்போது எண்ணூர் பாலத்தின் கீழே ஓடும் கொசஸ்தலை ஆற்றில் துர்காதேவி குதித்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியான சக பயணிகள் ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
அவர்கள் எண்ணூர் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதனை அடுத்து சுமார் 6 மணி அளவில் கரை ஒதுங்கிய துர்கா தேவியின் உடலை எண்ணூர் போலீசார் கைப்பற்றி ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் வழக்கு பதிவு செய்து துர்கா தேவியின் தற்கொலை குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. எண்ணூர் அருகே ஓடும் ரயிலில் இருந்து ஆற்றில் குதித்து இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.