மிரட்டலுக்கு பயப்படமாட்டேன்: சிறுமி ஆஷிபாவின் பெண் வழக்கறிஞர் உறுதி!!

639

ஆஷிபாவின் வழக்கிலிருந்து தான் விலக வேண்டும் என பார் கவுன்சில் தலைவர் மிரட்டுவதாக வழக்கறிஞர் தீபிகா ராஜவத் குற்றஞ்சாட்டியுள்ளார்.ஜம்மு – காஷ்மீரை சேர்ந்த 8 வயது சிறுமியான ஆஷிபா எட்டு பேர் கொண்ட கும்பலால் பலமுறை பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டார்.

இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என இந்தியா முழுவதும் கோரிக்கை எழுந்துள்ளது.இவ்வழக்கில் அரசு மனித உரிமை அமைப்பின் தலைவரும், வழக்கறிஞருமான தீபிகா ராஜவத் (38) வாதாடுகிறார்.

அவர் அளித்துள்ள பேட்டியில், வழக்கு விசாரணை அன்று நான் நீதிமன்றத்துக்கு சென்ற போது பார் கவுன்சில் தலைவர் பி.எஸ் ஸ்லதியா என்னை மிரட்டினார்.நான் பார் கவுன்சில் உறுப்பினராக இல்லை என்ற நிலையிலும் எனக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது.இந்த மிரட்டலுக்கு எல்லாம் நான் பயப்படவில்லை, இருப்பினும் பாதுகாப்பற்ற நிலையை உணர்கிறேன்.

எனக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என ஜம்மு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளேன் என கூறியுள்ளார்.இது தொடர்பாக பேசிய பார் கவுன்சில் தலைவர் ஸ்லதியா, நான் எனது சக பணியாளர்களுக்காக செயல்படுகிறேன், இது தொடர்பாக பேச விரும்பவில்லை. என் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் போலியானவை என கூறியுள்ளார்.