நெல்லை….
நெல்லை மாவட்டம் இட்டமொழி அருகே உள்ளது விஜயஅச்சம்பாடு கிராமம். இக்கிராமத்தில் உள்ள இளம்பெண் ஒருவர் முகநூல் மூலம் ஆண் நண்பர் ஒருவருடன் அறிமுகமாகி பழகியதாகக் கூறப்படுகிறது.
முகநூலில் பழகிய வாலிபர் இளம் பெண்ணிடம் ஆசை வார்த்தை கூறியதால் முகநூலில் பழகிய பழக்கம் நாளடைவில் காதலாக மலர்ந்தது.
தனது பிறந்த நாளை ஒட்டி தனது தோழிகளுக்கு பிறந்தநாள் பார்ட்டி வைக்கவேண்டும் என கூறி பெற்றோரிடம் ஆயிரம் ரூபாய் செலவுக்கு பணம் பெற்றுக்கொண்ட,
இளம்பெண் திசையன்விளை பேருந்து நிலையத்தில் பஸ் ஏறி திருநெல்வேலி சென்று காதலனுடன் உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பெண்ணின் பெற்றோர் அளித்த புகாரை அடுத்து திசையன்விளை காவல்துறையினர் கதாலன் இசக்கிமுத்து என்பவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.