முகப்புத்தக காதல் : யாழ். இளைஞனுக்காக சொந்த வீட்டில் திருடிய குடும்பப் பெண்!!

436

குடும்பப் பெண்…

முகப்புத்தகம் மூலம் அறிமுகமாகி காதலனாக மாறிய யாழ். இளைஞனின் பணத் தேவைக்காக தனது சொந்த வீட்டில் பல இலட்சம் பெறுமதியான நகைகளைத் திருடியதாக பெண்ணொருவர் கைதாகியுள்ளார்.

குறித்த பெண்ணுடன் அவரது நண்பியும் பொலிஸாரால் தடுத்துவைக்கப்பட்டுள்ள நிலையில் இருவரும் இன்று நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளனர்.

கம்பளையைச் சேர்ந்த 36 வயதான குறித்த பெண், தனது சகோதரியின் நகைகளைத் திருடியுள்ளதுடன் அவற்றை 6 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

கூட்டுக் குடும்பமாக வாழும் குடும்பமொன்றின் மூத்த சகோதரனின் மனைவியான குறித்த பெண்ணுக்கு, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞனுடன் முகப்புத்தகம் மூலம் அறிமுகம் கிடைத்துள்ளது.

கிடைக்கும் சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தி யாருக்கும் தெரியாமல் இந்தப் பெண் இளைஞனுடன் பேசிவந்த நிலையில் நாளடைவில் ஏற்பட்ட அன்பு காதலாக மாறியுள்ளது.

இருவரும் மிக நெருக்கமாக முகப்புத்தகத்தில் பழகிவந்த நிலையில், காதல் இளைஞன் தனக்கு, அவசரமாக பணம் தேவையாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ஏற்பட்ட சிந்தனையில், தனது கணவனின் தம்பியின் மனைவியின் அலுமாரியில் வைக்கப்பட்டிருந்த 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான நகைகளைத் திருடியுள்ளார் குறித்த பெண்.

அத்துடன், தனது நண்பியுடன் இணைந்து கெலிஓயாவிலுள்ள நகைக்கடை ஒன்றில் அவற்றை விற்பனை செய்து 6 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கு நகைகள் விற்கப்பட்டன. இதில், முதற்கட்டமாக ஈஸி காஷ் (Ez Cash) மூலம் 90 ஆயிரம் ரூபாயை யாழ்ப்பாணத்து காதல் இளைஞனுக்கு இந்தப் பெண் அனுப்பியுள்ளார்.

இப்படியிருக்கும்போது, வீட்டியின் அலுமாரியில் இருந்த நகைகள் காணாமல் போயுள்ளதை அறிந்த பெண்ணின் உறவினர்கள் கம்பளை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இதையடுத்து, பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில், குறித்த பெண்ணின் நண்பியிடம் இருந்த நகை விற்பனை செய்யப்பட்ட பற்றுச்சீட்டு கைப்பற்றப்பட்டதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் முக்கிய சந்தேகநபரான குறித்த குடும்பப் பெண் கைதாகியுள்ளார்.