முதலாளியின் மனசாட்சியற்ற செயல்… கண்கலங்க வைக்கும் பாசப்போராட்டம்!!

729

ஒரு நாய் தனது குட்டியை தனது எஜமானிடம் கொடுக்க மறுத்து பாசப்போராட்டம் நடத்திய சம்பவம் வீடியோவாக வெளிவந்து பலரையும் கவர்ந்துள்ளது.

பொதுவாக ஒரு நாய் குட்டி போட்டால் அதன் உரிமையாளர், அந்த குட்டிகளை மற்றவர்களுக்கு கொடுத்து விடுவது வழக்கம். அந்த தாய் நாயை மனதளவில் பாதிப்படைய செய்யும். ஆனால், நாயின் சோகத்தையெல்லாம் மனிதர்கள் கண்டுகொள்வதில்லை.

அதேபோல், சீனாவில் ஒருவர் தனது நாய் ஈன்ற குட்டிகளை மற்றவர்களிடம் கொடுப்பதை வழக்கமாக கொண்டிருந்தார். இந்நிலையில், மீண்டும் அந்த நாய் குட்டி போட்டது. அதை எடுக்க அந்த நபர் முயன்ற போது, தனது குட்டியை கொடுக்காமல் அதன் தாய் தடுக்க முயலும் சம்பவம் வீடியோவாக வெளிவந்து வைரலாகி வருகிறது.