முதலில் உற்சாகமாகி பின் சோகமான டோனியின் மனைவி : இதுவா காரணம்!!

923

 

டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 34 ஓட்டங்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது. ஐ.பி.எல்-லில் நேற்று நடந்த போட்டியில் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி களமிறங்கியது. முதலில் துடுப்பாட்டம் செய்த டெல்லி அணியில் ரிஷாப் பண்ட் 38 ஓட்டங்களும், விஜய் ஷங்கர் மற்றும் ஹர்சல் படேல் தலா 36 ஓட்டங்களும் குவிக்க, 162 ஓட்டங்கள் எடுத்தது.

பின்னர் ஆடிய சென்னை அணி 6 விக்கெட் இழப்புக்கு 128 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து படுதோல்வியடைந்தது. சென்னை அணி தரப்பில் அம்பத்தி ராயுடு 50 ஓட்டங்கள் எடுத்தார்.

முன்னதாக, சென்னை அணி விக்கெட் வீழ்த்தியபோது, டோனியின் மனைவி சாக்‌ஷியும், சுரேஷ் ரெய்னாவின் மனைவி பிரியங்காவும் கைதட்டி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டிருந்தனர்.

அதேபோல், சென்னை அணி துடுப்பாட்டம் செய்த போது, ராயுடு பந்தை சிக்சருக்கு அடித்தபோது சாக்‌ஷியும், பிரியங்காவும் மகிழ்ச்சியுடன் ஆரவாரம் செய்துக்கொண்டிருந்தனர்.

ஆனால், ராயுடுவுக்குப் பின்னர், பில்லிங்ஸ், ரெய்னா, டோனி என ஒவ்வொருவரும் விக்கெட்டை இழக்க, இருவரும் சோகமானார்கள். அதனைத் தொடர்ந்து, கிரிக்கெட்டில் இது சகஜம் தான் என்பது போல் அவர்கள் சென்றனர்.