தமிழகத்தில் முதியோர் இல்லத்தில் முதியோர்கள் கழிவறையில் தங்க வைத்து மலம் அல்ல வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் அன்னதானப்பட்டி வீட்டு வசதி வாரிய குடியிருப்பின் அருகே மாநகராட்சி துவக்கப்பள்ளி வளாகத்தில் லைப் டிரஸ்ட் முதியோர் இல்லம் செயல்பட்டு வருகிறது. இதை கலைவாணி என்பவர் நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
இந்த முதியோர் இல்லத்தில், 60 வயதுக்கும் மேற்பட்டோர் மற்றும் சுற்றித் திரிந்தவர்கள் என சிலர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று முதியோர் இல்லத்தில், தொடர்ந்து சத்தம் வந்துள்ளது.
இதனால் அப்பகுதி மக்கள் என்ன என்று சென்று பார்த்த போது, முதியவர் ஒருவரை அந்த காப்பகத்தில் இருந்த நபர் கையில் இருந்த குச்சியை வைத்து தாக்கி வெறும் கையால் மலம் அல்ல வைத்துள்ளார்.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக எதிர்ப்பு தெரிவித்து முற்றுகையிட்டுள்ளனர். அதுமட்டுமின்றி தொடர்ந்து இது போன்று காப்பகத்தில் நடந்து வருவதாகவும் புகார் கூறினர்.
குறித்த காப்பகத்தில் இருபது பேர் கூட இருக்க முடியாத நிலையில் 35-க்கும் மேற்பட்டோர் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும் மாநகராட்சி அதிகாரிகள் இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.