அஜித் அன்பு தான் அவரின் அத்தனை பலமும். அவரின் பின்னால் தல தல என தானாய் வந்த கூட்டத்தை நீங்கள் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறீர்கள். தியேட்டர்கள், சமூக வலைதளங்கள் என சாட்சிகள் ஏராளம்.
இன்று அவரின் வருகையை அத்தனை பேரும் எதிர்பார்க்கும் அளவிற்கு அவர் உயர்ந்துவிட்டார். ஆனால் அவர் அனுபவித்த வலிகள் ஏராளம். பிறந்தநாளில் அவரின் உயிர்மூச்சாய் இருப்பவர்கள் யார் என அவரே சொன்னது.
நான் இந்த சினிமா கலைத்துறையில் உள்ளே கஷ்டப்பட்டு நுழைந்ததைவிட இங்கே என்னை வெளியில் தள்ள முயற்சிப்பவர்களே அதிகம். எப்படியென்றால்?
நான் இந்த சினிமாவிற்குள் வந்தபொழுது எல்லோரும் என்னைப்போலவே கஷ்டப்பட்டு வந்தவர்கள் என்று தான் நினைத்துக்கொண்டு அணைவரிடமும் என் உடன் பிறந்த பிறவிகள் என்று அன்பாக பழகினேன்.
ஆனால் இங்கே சிலரிடத்தில் மட்டும் தான் பாசமும் நேசமும் இருந்தது. பாதிக்கு பாதிப்பேர் மனதில் பாசம் என்ற பேரில் விஷம் இருந்தது எனக்கு சத்தியமாய் தெரியாது.
எல்லோரும் என்னோட நன்பர்கள் என்று தான் கண்மூடித்தனமாக பழகிவிட்டேன். 2006 ல் நடந்த பந்தயத்தில் என்னோட முதுகெலும்புகள் உடைந்துப்போனது.
அந்த எலும்புகள் தான் எனக்கு என்னையே யார் என்று அடையாளம் காட்டியது. நான் அடிப்பட்டு மருத்துவமனையில் இருந்தபோது இந்த அடியோடு அடி என்னை ஒழித்துகட்ட முடிவுசெய்து விட்டார்கள்.
நான் வெளிமாநிலத்தில் இருந்து தமிழகத்தில் வாழ்ந்தாலும் இன்றுவரை வந்தோரை வாழவைக்கும் தமிழகம் என்ற உறுதிமொழியினை என் உயிர்மூச்சென நினைத்து காப்பாற்றிக்கொண்டு வருகிறேன்.
அப்படிப்பட்ட என்னை ஒரு சதிகாரக்கூட்டம் அடியோடு தோற்கடிக்க முடிவுசெய்து தீவிரமாக செயல்பட்டார்கள். நான் கை,கால்கள் உடைந்து மருத்துவமனையில் இருந்தபோது பாசம் என்ற பெயரில் வேசம் போட்டுக்கூட என்னை பார்க்க ஒருவரும் வந்ததில்லை.
அதன் பிறகு தான் நான் என்றைக்குமே அனாதைதான் என்பதை உணர தொடங்கினேன். பரவாயில்லை யாரை நம்பினாலும் என்னோட ரசிகர்களை மட்டும் நான் நம்பாமல் இருந்துவிடக்கூடாது என்று முடிவெடுத்தேன்.
அதனை கருத்தில் கொண்டு இன்றுவரை என் மனைவிக்கு பிறகு என்னோட மகளுக்கு பிறகு எனக்கு எல்லாமே என் ரசிகர்களும். நான் நம்பிவந்த தமிழ் மண்ணும் தான் என்று.
இப்படி அன்றெடுத்த முடிவுதான் இன்றுவரை என்னை நான் நானாக இருக்கவைக்கிறது. அதனால் தான் நான் யாருடைய மனதும் புண்படுத்தும்படி நடந்துகொள்ளாமல் எந்த ஒரு நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்வதில்லை.
ஆனால் என்னோட ரசிகர்களின் பலத்தின் படி என் பெயரை உச்சரிக்காமல் எந்த ஒரு நிகழ்ச்சிகளும் நடப்பதில்லை. என்பதை மட்டும் நான் அறிந்துகொண்டே இருக்கிறேன்.
நான் எப்படியோ அப்படியே என் ரசிகர்களும். நான் திமிரானவன் என்றால் அவர்களும் திமிருபிடித்தவர்கள் தான் நான் நல்லவன் என்றால் அவர்களும் நல்லவர்கள் தான்.இது தான் என்னோட ரசிகர்களின் சாம்ராஜ்ஜியம்.. வாழ்த்துக்கள் அஜித்..