ரேணுகா…
முன்னாள் காதலன் உதவியுடன் இருவரை ஏமாற்றி பெண் ஒருவர் திருமணம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள காஜுவாக்கா நகரில் வசித்து வருபவர் ரேணுகா.
இவரும் அந்த பகுதியை சேர்ந்த சீனிவாசன் என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இதையடுத்து, கர்பமடைந்த ரேணுகா பெண் குழந்தை ஒன்றை பெற்றுள்ளார். ஆனால் சீனிவாசன் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார்.
மகளின் எதிர்காலத்திற்காக சிறிது பணம் ரேணுகாவிடம் கொடுத்துள்ளார். இதனிடையே, ரேணுகாவை தொடர்பு கொண்ட அவர் ராணுவத்தில் வேலை செய்யும் தனது சித்தி மகன் பிரசாத் வலையில் வீழ்த்தி திருமணம் செய்துகொள்ள திட்டம் தீட்டிகொடுத்துள்ளார்.
அதன்படி ரேணுகாவிற்கும் பிரசாத்துக்கும் திருமணம் நடந்துள்ளது. இருவரும் பிரகாஷ் வேலை செய்யும் ஊருக்கு சென்றுள்ளனர். அங்கு அவர் ரேணுகாவிற்கு பல லட்சம் மதிப்புள்ள நகைகளை வாங்கி தந்திருக்கிறார்.
இந்த நிலையில், முன்னாள் காதலன் சீனிவாசனுடன் ஒன்றாக இருக்க முடிவு செய்து தனக்கு வேலை கிடைத்திருப்பதாக கணவனிடம் பொய் கூறி விசாகப்படிணம் வந்துள்ளார்.
சீனிவாசனுடனான ரகசிய உறவை தொடர்ந்ததுடன் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்த சாய் என்பவரையும் திருமணம் செய்து கொண்டார்.
இதனைத்தொடர்ந்து, திருமணமான மூன்றே நாளில் ரேணுகா கர்ப்பமடைந்தால் சாய் அவரை விட்டு விலகியுள்ளார். இந்த ஏமாற்று வேலையை அறிந்த பிரசாத் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரை அடுத்து ரேணுகாவை கைது செய்து விசாரணையை தொடர்ந்துள்ளனர்.