மூன்று மனைவிகள்… 4 லட்சம் வருமானம்: ராஜ வாழ்க்கை வாழும் பிச்சைக்காரர்!!

761

இந்தியாவில் ரயில் நிலையத்தில் பிச்சையெடுத்து கொண்டே வேறு தொழில்களும் செய்து லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் நபரின் செயல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள சக்ராத்பூரில் பிச்சையெடுத்து வருபவர் சோட்டு பராக் (40). மாற்றுதிறனாளியான இவருக்கு மூன்று மனைவிகள் உள்ளனர்.

சோட்டு, வெஸ்டேஜ் என்ற முன்னணி சுகாதார பாதுகாப்பு, தனிப்பட்ட பாதுகாப்பு மற்றும் ஒப்பனை பொருட்கள் விற்பனை நிறுவனத்தில் உறுப்பினராகவும் உள்ளார்.இதற்கான அடையாள அட்டையையும் அவர் வைத்துள்ளார்.இதோடு சிம்திகா மாவட்டத்தில் ஒரு பெரிய பாத்திர கடையும் சோட்டு வைத்துள்ளார். இதை அவரின் ஒரு மனைவி நடத்தி வருகிறார்.

எல்லா வியாபாரத்திலும் சேர்த்து சோட்டுவுக்கு மாதம் 30,000 வருமானம் வருகிறது, ஆண்டுக்கு 4 லட்சம் வருவதாக அவரே கூறுகிறார்.இதோடு இன்னும் வேறு சில தொழில்களையும் சோட்டு செய்து வருகிறார். அவர் கூறுகையில், வறுமை காரணமாக சிறு வயதிலிருந்தே ரயில் நிலையத்தில் பிச்சையெடுக்கிறேன்.

ஆரம்பத்தில் தினமும் 1,000லிருந்து 1,200 வருமானம் வந்து பின்னர் அது படிப்படியாக உயர்ந்தது என கூறுகிறார்.தன்னுடைய மனைவிகள் மற்றும் மற்ற வியாபாரங்கள் குறித்து விரிவாக பேச சோட்டு மறுத்துவிட்டார்.