மூளைச்சாவு அடைந்த சிறுவனின் தற்போதைய நிலை! நெகிழ வைக்கும் உண்மை சம்பவம்!

641

இரண்டு ஆண்டுகளுக்குமுன் பைக் விபத்தொன்றில் தூக்கி வீசப்பட்டு மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்களால் கைவிடப்பட்ட Taylor Reid என்னும் சிறுவன் மீண்டும் புன்னகைக்க தொடங்கியிருக்கும் அற்புதம் பிரித்தானியாவில் நடந்தேறியுள்ளது.

அவன் பிழைக்க மாட்டான் என்று கூறி மூன்று முறை அவனது செயற்கை சுவாசக் கருவிகளை அகற்றிவிடுமாறு மருத்துவர்கள் ஆலோசனை கூறினர்.ஆனால் மனம் தளராத Taylor Reidஇன் பெற்றோர் அவனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர், ஏராளமான பொருட்செலவில் அவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

Dr Goshi என்னும் மருத்துவர் அவனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்தார், ஆச்சரிய விதமாக Taylorஇன் உடல் நலத்தில் முன்னேற்றம் காணப்படுகிறது.அவன் இப்போது புன்னகைக்கிறான், அழுகிறான், கண்களைத் திறக்கிறான், இவை மூன்றையும் அவனால் செய்ய முடியாது என்று மருத்துவர்கள் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஐந்து வயது முதலே சிறுவர்களுக்கான பைக் ரேஸில் கலந்து கொள்வது Taylorஇன் வழக்கம்.அவ்வாறு பைக் ரேஸ் ஒன்றில் போட்டியிடும்போது அவன் பைக்கிலிருந்து தூக்கி வீசப்பட்டான், அவனது மண்டையோட்டில் பல இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

மருத்துவர்கள் கைவிட்டும் மனம் தளராமல் Taylorஇன் பெற்றோரும் Dr Goshiயும் எடுத்துக்கொண்ட முயற்சிகளின் விளைவாக அவன் இப்போது முன்னேறி வருகிறான்.அவனை stem cell therapyக்காக இந்தியாவுக்கு கொண்டு செல்ல இருப்பதாக அவனது பெற்றோர் தெரிவித்துள்ளனர்.