மைதானத்தில் நிலைகுலைந்து போன வீரர்! நொடிப்பொழுதில் காப்பாற்றப்பட்ட சம்பவம்!!

641

கால்பந்து தாக்கியதில் மைதானத்திலேயே நிலைகுலைந்து போன வீரர் தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

நேற்று முன்தினம் Slovakia’s King’s Cup-ன் இறுதிப்போட்டி நடந்தது, இதில் கால்பந்து தாக்கியதால் அதிர்ச்சியைடைந்து மைதானத்திலேயே சரிந்த முன்னாள் லிவர்பூல் அணி வீரர் Martin Skrtel நாக்கு தொண்டையில் சிக்கிக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போட்டியின் 27வது நிமிடத்தில் சக அணி வீரர் அடித்த பந்து மார்டினின் பின்பக்க தலையில் அடித்தது, அதில் நிலைதடுமாறிய Martin Skrtel-ன் மயக்கமடைந்து மைதானத்திலேயே விழுந்தார், அதிர்ச்சியில் அவரது நாக்கு அவரின் தொண்டையில் சிக்கிக்கொண்டது.

உடனே சுதாரித்த சக அணி வீரர் Ondrej Duda சற்றும் தாமதிக்காமல் மார்ட்டின் வாயில் கையை விட்டு, அவரது தொண்டையில் சிக்கியிருந்த நாக்கை வெளிப்புறமாக இழுத்து இயல்பு நிலைக்கு மாற்றினார்.

இந்த எதிர்பாராத திடீர் சம்பவத்தால் தாய்லாந்தின் ராஜமங்கல ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்த போட்டி சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.

Slovakia அணி மருத்துவர் முதலுதவி சிக்கிச்சை அளித்த பின்னர் தான் இயல்பாக இருப்பது போல் உணர்ந்ததாக Martin Skrtel-ன் போட்டிக்கு பின்னர் தெரிவித்தார்.

இந்த போட்டியில் 3-2 என்ற கணக்கில் தாய்லாந்து அணியை ஸ்லோவேக்கியா அணியை வென்றது குறிப்பிடத்தக்கது.