திருவள்ளூர்…
திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் நாராயணன். இவரது மனைவி ராணி. இவர் தனியார் கம்பெனி ஒன்றில் பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் வீட்டின் மொட்டை மாடியில் காய்ந்த துணிகளை எடுப்பதற்காக நேற்று இரவு ராணி சென்றுள்ளார்.
அப்போது துணி எடுத்துக் கொண்டிருந்த போது கயிறு கட்டியிருந்த தூண் திடீரென பெயர்ந்து அவர் மீது விழுந்துள்ளது.
இதில் தூணுக்கு அடியில் சிக்கிக் கொண்டார். இதைப்பார்த்த பக்கது வீட்டினர் அவரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்குப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பழமையான தூணில் கயிறு கட்டியிருந்ததால் இந்த விபத்து நடந்துள்ளது என போலிஸார் தெரிவித்துள்ளனர்.