சுரபி..
விக்ரம் பிரபு நடித்த ‘இவன் வேறமாதிரி’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சுரபி. அதன்பிறகு நடிகர் ஜெய்யுடன் புகழ், தனுஷுடன் வேலையில்லா பட்டதாரி ஆகிய படங்களில் நடித்தார்.
அதன்பிறகு பெரிதாக வாய்ப்புகள் இல்லாததால், தெலுங்கு, கன்னட படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். ஜி.வி.பிரகாஷுடன் ‘அடங்காதே’ என்ற தமிழ் படத்திலும் நடித்துள்ளார். இதுவரை கிளாமருக்கு நோ சொன்ன சுரபி,
தமிழில் முன்னணி கதாநாயகியாக வேண்டும் என்ற ஆசையில் எந்த கிளாமருக்கும் நான் தயார் என்று சொல்லியிருக்கிறார். மற்ற மொழிப் படங்களைக் காட்டிலும் தமிழில் கவனம் செலுத்த இருப்பதாகக் கூறும் இவர்,
படங்களில் துறுதுறு பெண்ணாக நடிக்க வேண்டும் என்ற ஆசையிருப்பதாகவும் கூறியிருக்கிறார். ஒருபக்கம் தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
இந்நிலையில், சமீபத்தில் அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அவரின் அழகை பார்த்த ரசிகர்கள் ‘வெயில்ல நின்னாலே நீ உருகிடுவ’ என பதிவிட்டு வருகின்றனர்.