யாரும் வீட்டுக்கு வராதீங்க! போஸ்டர் வைத்த பெண்!! பரபரப்பு சம்பவம்!

244

அறிவிப்பு பலகை………..

உறவினர்கள் உட்பட யாரும் வீட்டுக்கு வர வேண்டாம்’ என தன்னுடைய வீட்டின் முன் அறிவிப்பு பலகை வைத்துள்ள ஆசிரியரின் செயல் சமூவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கொரோனா இரண்டாம் அலை தீவிரத்தால், தமிழகத்தில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது, இதனால் மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். குழந்தைகள் விளையாட செல்ல முடியாமலும், முதியோர் நடைபயிற்சி, பூங்காவுக்கு செல்ல முடியாமலும் தவிக்கின்றனர்.

இதனால் சிலர், உறவினர்கள், நண்பர்களின் வீடுகளுக்கு செல்ல தொடங்கினர். இதன்மூலம் நோய் பரவல் அபாயம் ஏற்பட்டதால், பலரும், ‘வீட்டுக்கு நண்பர்கள், உறவினர்கள், வெளியாட்கள் யாரும் வர வேண்டாம்’ என, அட்டை, பேப்பர், போர்டுகளில் எழுதி, வீட்டின் கதவுகளில் தொங்க விட்டுள்ளனர்.

இதையும் மீறி வருபவர்களை தவிர்க்க, ‘வீட்டுக்கு வர வேண்டாம்’ என வைத்த போர்டுகளை படம் எடுத்து, உறவினர், நண்பர்களின் வாட்ஸ் ஆப் குழுக்களிலும் பரப்பி வருகின்றனர்.

சமீபத்தில் கூட சேலத்தை சேர்ந்த ஆசிரியர் ஒருவர், தன்னுடைய வீட்டின் முன் போர்டு வைத்தது வைரலானது குறிப்பிடத்தக்கது.