யூடியூப் பார்த்து 13 வயது சிறுமி எடுத்த விபரீத முடிவு : எச்சரிக்கை செய்தி!!

344

திருச்சி…..

இந்தியாவில் 13 வயது சிறுமி ஒருவர் உடல் எடை அதிகரித்த விரக்தியில் யூடியூப் பார்த்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் உள்ள அலெக்சாண்ட்ரியா ரோடு பகுதியில் வசித்து வருபவர் ஷர்மிளா. இவர் திருச்சி எஸ்பிஐ வங்கியில் உதவி மேலாளராக பணியாற்றி வருகிறார். இவரது கணவர் புருஷோத்தமன்.

இந்த தம்பதி கடந்த சில ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு 13 வயதில் ஷிவானி என்ற மகள் உள்ள நிலையில் தனியார் பள்ளியில் 8 ஆம் வகுப்பு பயின்று வந்தார்.

இவர் உடல் எடையை குறைக்க தொடர்ந்து பல்வேறு சிகிச்சை முறைகளை எடுத்து வந்துள்ளார். இதில் எந்தவித முன்னேற்றமும் இல்லாததால் தொடர்ந்து மன உளைச்சளுக்கு ஆளாகியுள்ளார்.

இந்நிலையில் சிவானி நேற்று இரவு வீட்டில் சாப்பிட்டுவிட்டு தன்னுடைய அறைக்கு சென்ற அவர் இன்று காலை வரை கதவு திறக்காததால் சந்தேகம் அடைந்த பெற்றோர் அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது சிவானி தூக்கில் தொங்கி உள்ளார்.

இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து பொலிசார் விசாரணை நடத்தி வந்தனர்.

உடல் பருமனாக இருப்பதால் தொடர்ந்து மன உளைச்சலில் இருந்த ஷிவானி தற்கொலை செய்ய முடிவு செய்து யூடியூப் மூலம் எவ்வாறு தற்கொலை செய்து கொள்வது குறித்த வீடியோக்களை பார்த்துள்ளார்.

இறுதியில் அதன்படி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸ் தரப்பில் கூறப்படுகின்றது.