நயன்தாரா..
தென்னிந்திய சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் தான் நடிகை நயன்தாரா. பல ஆண்டுகளாக தொடர்ந்து தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக ஆதிக்கம் செலுத்தி வரும் நயன்தாரா தற்போதும் கூட கைவசம் ஏகப்பட்ட படங்களை வைத்து கொண்டு மிகவும் பிசியாக நடித்து வருகிறார்.
மேலும் நயன்தாரா பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலிப்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான். இவர்கள் இருவரும் பல ஆண்டுகளாக காதலித்து வருகிறார்கள். மேலும் திருமணம் செய்து கொள்ளாமல் லிவிங் டூ கெதர் முறையில் ஒன்றாக வாழ்ந்து வருகிறார்கள். இந்நிலையில் சமீபகாலமாகவே இவர்களின் திருமணம் எப்போது என்ற கேள்வி தான் எழுந்து வருகிறது.
இதுதவிர சமீபகாலமாகவே இவர்கள் இருவரும் கோவில் கோவிலாக சென்று வருகிறார்கள். மேலும் சமீபத்தில் கோவில் ஒன்றில் எடுக்கப்பட்ட புகைப்படத்தில் நயன்தாரா திருமணமான பெண்களை போல நெற்றியில் குங்குமம் வைத்திருந்ததால் இருவருக்கும் ரகசியமாக திருமணம் முடிந்து விட்டதாக கூறப்பட்டது.
அதுமட்டுமல்ல நயன்தாரா விரைவில் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றெடுக்க உள்ளதாகவும் தகவல் பரவி வருகிறது. அதாவது நயன்தாராவிற்கு தற்போது 37 வயதாகி விட்டதால் இதற்குமேல் குழந்தை பெற்றுக் கொள்வதில் சிரமங்கள் ஏற்படும் என்பதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல் திருமணத்திற்கு பிறகு குழந்தைக்காக ஒரு வருடம் நடிப்பதை விட வேண்டும் அல்லது குழந்தை பெற்று கொள்ளாமல் இருக்க வேண்டும். இதனால் தான் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவை போல் நயன்தாராவும் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த தகவல் எந்த அளவு உண்மை என்பது தெரிய வில்லை.