சொல்ல மறந்த கதை, ஆட்டோகிராப் ஆகிய படங்களில் நடித்த இயக்குனர் சேரன், அடுத்ததாக ராஜாவுக்கு செக் வைக்கவுள்ளார். பாரதி கண்ணம்மா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் சேரன். அதைத்தொடர்ந்து பல்வேறு படங்களை இயக்கிவிட்ட சேரன், திருட்டு VCD-க்களை ஒழிக்கும் விதமாக, C2H என்ற புதிய முயற்சி ஒன்றை மேற்கொண்டார்.
அதாவது, C2H என்ற நிறுவனத்தை தொடங்கி, அதன் மூலம் திரைப்படங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் புதிய முயற்சியை மேற்கொண்டார். அதன்படி, அவர் இயக்கிய ஜே.கே. என்னும் நண்பனின் வாழ்க்கை என்ற படத்தை C2H சேனல் மூலம் வெளியிட்டார். ஆனால், போதிய வரவேற்பு கிடைக்கவில்லை.
தற்போது சிறிய இடைவெளிக்குப் பிறகு புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த புதிய படத்திற்கு ‘ராஜாவுக்கு செக்’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள். இப்படத்தை சாய் ராஜ்குமார் இயக்கியுள்ளார்.தற்போது இப்படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.