ரூ.1.5 கோடி, 200 பவுன் நகை சீர்வரிசை : கணவன் செய்த செயலை தட்டிக் கேட்ட மனைவிக்கு நேர்ந்த அவலம்!!

573

சென்னை…

சென்னை கொளத்தூர் திருமுருகன் நகரைச் சேர்ந்தவர் வினோத் குமார். மருத்துவரான இவர், வேல்ஸ் மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராகவும் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி மோனிகா ஸ்ரீ, இந்த தம்பதிக்கு ஏழுமாத குழந்தைகளான அஷ்வத் – அஸ்வின் என்ற இரட்டை குழந்தைகள் உள்ளனர். கோவையை பூர்வீகமாகக் கொண்ட மோனிகாஸ்ரீ அவரது பெற்றோருக்கு ஒரே மகள்.

பொறியியல் முடித்துவிட்டு ஐஏஎஸ் ஆக வேண்டும் என்பதற்காக, சென்னையில் உள்ள சங்கர் ஐஏஎஸ் அகாடமியில் படித்து வந்தார்.

2020ம் ஆண்டு மார்ச் மாதம், மோனிகா ஸ்ரீக்கும் வினோத்குமாருக்கும் பெற்றோரால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் நடந்தது. திருமணத்தின்போது, மோனிகாஸ்ரீக்கு, 120 பவுன் நகைகளு்ம் மாப்பிள்ளைக்கு ஒரு கார் மற்றும் சீர்வரிசைகளும் கொடுத்துள்ளனர் அவரது பெற்றோர்.

அதோடு, மோனிகாஸ்ரீக்கு கோடிக்கணக்கான மதிப்புள்ள சொத்துக்கள் இருப்பதால் அவை அனைத்தும் தங்கள் காலத்திற்குப் பின்னர் அவருக்குத் தான் வரும் என்றும் வாக்குறுதி கொடுத்துள்ளனர்

ஆனால், திருமணமான சில மாதங்களிலேயே வினோத்குமாரும் அவரது குடும்பத்தினரும் 200 பவுன் நகைகள் மற்றும் மருத்துவமனை கட்ட ஒன்றரைக் கோடி ரூபாய் வாங்கி வர வேண்டும் என்று கேட்டு வரதட்சணைக் கொ.டு.மைகளைத் தொடங்கியுள்ளனர்.

மோனிகாஸ்ரீ கருவுற்றிருந்தபோது, அதைக் கலைக்க வினோத்குமார் மா.த்.திரைகளும் கொடுத்துள்ளார். 2020ம் ஆண்டு டிசம்பரில் மோனிகாஸ்ரீக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தன.

3 மாதங்கள் கழித்து கணவர் வீடு திரும்பிய அவரிடம் பணம் கேட்டு மீ்ண்டும் கணவன் குடும்பத்தினர் கொ.டு.மை செ.ய்.துள்ளனர். ஒருகட்டத்தில், மோனிகாஸ்ரீ ஐஏஎஸ்சுக்குப் படிக்கக் கூடாது என்றும் கணவன் தடை போட்டுள்ளார்.

இந்த நிலையில்தான் தனது கணவருக்கு வேறொரு பெண்ணுடன் க.ள்.ள.த் தொ.ட.ர்பு இருப்பது தெரியவந்துள்ளதாக மோனிகாஸ்ரீ தனது புகாரில் தெரிவித்துள்ளார். அதனால், தனது கணவனுடன் தன்னை சேர்த்து வைக்கும்படி வில்லிவாக்கம் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார் மோனிகாஸ்ரீ. விசாரணையில், தன்னுடன் வாழ வேண்டுமானால் தனது கணவனுக்கு க.ள்.ள.க்.கா.த.ல் இல்லை என்று எழுதி வாங்கிக் கொண்டார் வினோத்குமார்.

இதையடுத்து, தனது கணவன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வரதட்சணை புகார் அளித்துள்ளார் மோனிகாஸ்ரீ. விசாரணையில், வரதட்சணைக் கொ.டுமை உறுதியானதை அடுத்து கணவர் வினோத்குமார், அவரது தந்தை கண்டிபன், அம்மா ரமணி, தம்பி கெளசிக், சிற்றப்பா ரவி, பெரியம்மா புனிதா, மற்றும் மாமா நெடுமாறன் ஆகியோர் மீது வில்லிவாக்கம் போ.லீ.சார் வ.ழ.க்.கு.ப் பதிவு செ.ய்.து.ள்.ளனர்.

இவர்களில் வினோத்குமாரின் சிற்றப்பா ரவி வேல்டெக் கல்லூரியில் பேராசிரியராகவும், பெரியப்பா பார்த்திபன் நந்தனம் அரசு கலைக் கல்லூரியில் பேராசிரியராகவும் பணிபுரிந்து வருகின்றனர். வழக்குப் பதிவான 8 பேரும் தலைமறைவானதால் போலீசார் அவர்களைத் தேடி வருகின்றனர்.