ஆந்திரா….
ஆந்திராவில் லட்சக்கணக்கில் பணம் வாங்கிக்கொண்டு காதலி ஏமாற்றியதால் காதலன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள கொப்பிசெட்டிவாரி பள்ளி கிராமத்தைச் சேர்ந்த சங்கர் ராவ் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆனவர். இவர் அதே கிராமத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவரை காதலித்து வந்தார்.
2 ஆண்டுகள் நீடித்த இந்த காதல் காலக்கட்டத்தில் சங்கர் ராவ்விடம் இருந்து அப்பெண் லட்சக்கணக்கான மதிப்புள்ள பணம், நகைகள், ஆடைகள் ஆகியவற்றை வாங்கியிருக்கிறார். இதனிடையே கடந்த சில நாட்களாக அந்த பெண் இவரிடம் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார்.
சங்கர்ராவ் பலமுறை முயற்சித்தும் அந்தப் பெண் பேச மறுத்ததுடன், உன்னை எனக்கு பிடிக்கவில்லை என்று கூறியதாக தெரிகிறது.
இதனைத் தொடர்ந்து நேற்று இரவு சங்கர்ராவ் தன்னுடைய நண்பர்கள் அனைவரையும் இணைத்து வாட்ஸ் அப்பில் குழு ஒன்றை ஏற்படுத்தியுள்ளார்.
அந்த பெண் தன்னை ஏமாற்றி பணம், நகைகள் ஆகியவற்றை வாங்கி சென்றது பற்றி விபரத்தை வாட்ஸ் அப்பில் பதிவு செய்த சங்கர்ராவ்.
வேதனை தாங்காமல் தற்கொலை செய்து கொள்கிறேன் என்று கூறிவிட்டு வீட்டிலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.