6 நாட்கள் தவித்த மருமகள்..
கொரோனா வைரஸிற்கான அறிகுறிகளைப் பெற்றிருந்த என்.எச்.எஸ் மருத்துவர் லண்டனில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் உயிரிழந்த நிலையில், அவரது உடலை கண்டுபிடிப்பதற்கு ஆறு நாட்கள் ஆகியுள்ளது.
பிலிப்பைன்சை சேர்ந்த 51 வயதான டொனால்ட் சுல்டோ 18 ஆண்டுகளுக்கு முன்பு லண்டனுக்கு குடிபெயர்ந்தார். குடிபெயர்ந்த இவர் என்.எச்.எஸ்ஸில் பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் தற்போது பிரித்தானியாவில் கொரோனா ருத்ரதாண்டவத்தை காட்டி வருவதால், என்.எச்.எஸ் ஊழியர்கள் சரியான பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.
இதையடுத்து கொரோனாவிற்கான அறிகுறிகளைப் பெற்ற டொனால்ட் சுல்டோ தன்னுடைய அடுக்கு மாடி குடியிருப்பில் தனி ஒருவனாக இறந்து கிடந்துள்ளார். அதன் பின் அவரது உடலை கண்டுபிடிப்பதற்காக மருமகளான Emylene Suelto Robertson-க்கு ஆறு நாட்கள் தேவைப்பட்டுள்ளது.
இது குறித்து Emylene Suelto Robertson கூறுகையில், என்னுடைய மாம கொரோனாவிற்கான சாதமகான நோயாளியிடமிருந்து நான் நோயை பெற்றதாக கூறினார்.
அவர், தன்னிடம் பாதுகாப்பு உபகரணங்கள் இல்லை, நோயாளி எனக்கு முன்னாள் இருமிக் கொண்டிருந்ததன் விளைவே இந்த வைரஸ் தன்னை பிடித்துவிட்டதாக என்னிடம் கூறினார். உடலின் வெப்பநிலையை பரிசோதித்த போது, அவர் மார்ச் 28-ஆம் திகதி முதல் ஒருவாரம் தனிமைப்படுத்தி கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டார்.
இதன் காரணமாக வீட்டில் சுயதனிமைப்படுத்தப்பட்ட அவர் ஆரம்பத்தில் எந்த ஒரு அறிகுறிகளையும் பெறவில்லை. அதன் பின் ஐந்தாவது நாளில் தொண்டை வலி இருப்பதை என்னிடம் கூறினார். அதன் பின் காய்ச்சல் இருந்ததாகவும் கூறினார்.
இதனால் நான் அவரை மருத்துவமனைக்கு செல்லும்படி அறிவுறுத்தினேன். ஏனெனில் நான் ஸ்காட்லாந்தில் இருக்கிறேன், என்னால் செல்ல முடியாது என்பதால் அப்படி கூறினேன்.
அதன் படி அவர் என்.எச்.எஸ் அவசர எண்ணான 111-ஐ தொடர்பு கொள்ள முயற்சித்துள்ளார். ஆனால் தொடர் அழைப்புகள் காரணமாக, அவரால் அதை பெற முடியவில்லை. இதையடுத்து அவரை நான் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் தொடர்பு கொள்ள முயற்சித்தேன். ஆனால் அவர் பதில் அளிக்கவில்லை.
நான் ஒரு வேளை மருத்துவமனையில் இருப்பார் என்று எதிர்பார்த்தேன். இதையடுத்து கடந்த 7-ஆம் திகதி நண்பரை தொடர்பு கொண்டு, அதன் பின் அங்கு சென்று பொலிசாரை பார்க்கும் படி வற்புறுத்தினேன்.
ஆனால் பொலிசார், வீட்டில் யாரும் இல்லை என்றும், உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை என்றும் கூறினர். அதன் பின் நான் பொலிசாரை தொடர்பு கொண்டு, என்னை அறிமுகப்படுத்திய பின், பொலிசாரை மாமாவின் அடுக்குமாடி குடியிருப்பிற்குள் சென்று பார்க்கும் படி கெஞ்சினேன்.
அதன் பின் அவர்கள் வீட்டின் உள்ளே நுழைந்து பார்த்த போது, மாமா இறந்து கிடந்துள்ளார். இதையடுத்து பொலிசார் அழைக்கப்பட்டு உடல் எடுத்து செல்லப்பட்டது.
இந்த நடைமுறைக்கு பின் எங்களுக்கு சில விடயங்கள் கடினமாக இருந்தது. ஏனெனில், எங்களுக்கு அதன் பின் யாருடனும் எந்த ஒரு நேரடி தொடர்பும் இல்லை, மாமா இறந்த விஷயம் தெரிந்துவிட்டது, ஆனால் அவரின் உடல் எங்கிருக்கிறது என்பது தெரியவில்லை,
பிலிப்பைன்ஸில் உள்ள எனது குடும்பத்தினர் ஒவ்வொரு நாளும் என்னை அழைத்து, நாங்கள் உடலுடன் என்ன செய்கிறோம் என்று கேட்டார். கடந்த செவ்வாய் கிழமை வரை, இறந்த ஆறு நாட்களுக்கு பல்வேறு முயற்சிகளின் பயனாக, உடல் போப்ளர் கொரோனர் நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டதாக கூறப்பட்டது.
அவரது மரணத்திற்கான காரணம் இன்னும் தீர்மானிக்கப்படவில்லை. ஏப்ரல் 2-ஆம் திகதி அன்று, தனது மாமாவுடன் கடைசியாக பேசினேன் என்று கூறி முடித்தார்.
இம்பீரியல் கல்லூரி ஹெல்த்கேர் என்.எச். எஸ் அறக்கட்டளையின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், டொனால்ட் இறந்ததில் நாங்கள் மிகவும் வருத்தப்படுகிறோம், எங்கள் எண்ணங்களும் இரங்கலும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் சக ஊழியர்களுடன் இந்த கடினமான நேரத்தில் உள்ளன.
தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களைப் பயன்படுத்துவது குறித்த தேசிய வழிகாட்டலை நாங்கள் கண்டிப்பாக பின்பற்றுகிறோம். கொரோனா நோயாளிகளுக்கு டொனால்ட் ஒரு பகுதியில் வேலை செய்யவில்லை என்று கூறியுள்ளார்.