லண்டனில் இலங்கை தமிழ் இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் 44 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மேற்கு லண்டனில் வசித்து வந்த அருனேஸ் தங்கராஜா என்ற 28 வயதான இலங்கை தமிழ் இளைஞன் நேற்று கொலை செய்யப்பட்டார்.நேற்று காலை குறித்த இளைஞன் மிட்சம் (Mitcham) என்ற பகுதியில் கொடூரமாக கத்திக்குத்துக்கு இலக்காகி படு காயமடைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.
இதையடுத்து அவரை காப்பாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோதும், அவை பலனளிக்கவில்லை என்று அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கொலை தொடர்பில் 44 வயதுடைய சந்தேகநபர் ஒருவரை ஸ்கொட்லாந்து பொலிஸார் கைது செய்து விசாரணைகளை மேற்கொள்வதாக பிரித்தானிய ஊடகமொன்று தெரிவித்துள்ளது.