வழுக்கை தலையினால் பெண் கிடைக்காததால் விரக்தியடைந்த இளைஞர் செய்த மோசமான செயல்!!

315

தேனி…

தேனி மாவட்டம் கண்ணிசேர்வைபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மனோஜ்குமார். 29 வயதான இந்த இளைஞர் கோயம்புத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் பிடெக் முடித்துவிட்டு வேலை இல்லாமல் சொந்த ஊரில் சுற்றி வருகிறார். இவரது தலைமுடி முழுவதும் கொட்டி விட்டதால் கொஞ்சம் உள்ள முடியையும் மொட்டை அடித்துக்கொண்டிருக்கிறார்.

இதனால் எந்தப் பெண்களும் இவரை காதலிக்கவில்லை. இவருடன் நெருங்கிப் பேசுவதும் இல்லை.

இந்த இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான அவர் நேரில் தன்னை பார்க்கும் பெண்கள் தானே தன்னை காதலிக்க மறுக்கிறார்கள் பேச மறுக்கிறார்கள்.

அதே முகநூலில் அழகான ஆண்களின் புகைப்படத்தை வைத்து பேக் ஐடி உருவாக்கி அதன் மூலம் தன்னை அழகான பெண்கள் விரும்புவார்கள் என்று சைக்கோ தனமாக ஒரு முடிவை எடுத்திருக்கிறார்.

அதன்படியே அழகான ஆணின் புகைப்படத்தோடு மனோஜ்குமார் என்ற பெயரை சுருக்கி ராஜ் என்ற பெயரில் போலி ஐடி உருவாக்கி அதில் முகநூலில் வந்த பெண்ணிடம் உங்களை எனக்கு ஏழு வருடமாக தெரியும் .

என்னை உங்களுக்கு தெரியாது. நான் கோயம்புத்தூரில் உள்ள தனியார் வங்கியில் தற்போது மேலாளராக பணிபுரிந்து வருகிறேன் என்று சொல்லி இருக்கிறார்.

மேலும், நான் உங்களை திருமணம் செய்யவல்ல கொள்ள விரும்புகிறேன் என்று சொல்ல, முகநூலில் இருந்த அந்த அழகான ஆணின் புகைப்படத்தை பார்த்துவிட்டு வங்கியில் மேலாளர் என்று சொல்லுகிறாரே நல்ல அழகு நல்ல வேலை நல்ல படிப்பு என்பதை நம்பி அந்த பெண்ணும் அவருடன் தொடர்ந்து செல்போனில் பேசி வந்திருக்கிறார்.

தனிமையில் இருக்கும் போது இருவரும் ஆபாச மெசேஜ் செய்து ஆபாச புகைப்படங்களையும் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள் .

பின்னர் அந்த இளம் பெண்ணின் ஜிமெயில் மற்றும் முகநூல் போன்ற சமூக வலைத்தள பாஸ்வேர்டை பெற்று அதிலிருந்து இளம்பெண் குறித்த விவரங்களையும் அவரது அனைத்து போன் நம்பர் களையும் மனோஜ்குமார் எடுத்து வைத்துக் கொண்டிருக்கிறார்.

சமீபத்தில் தனது அலுவலகத்தில் பிரச்சனை காரணமாக உடனடியாக 50 ஆயிரம் ரூபாய் பணம் வேண்டும் என்று குமார் கேட்க , உடனே 20 ஆயிரம் ரூபாய் அனுப்பி வைத்திருக்கிறார். மீதத் தொகையை யாரிடமாவது வாங்கிய அனுப்புகிறேன் என்று சொல்லியிருக்கிறார் .

மீதத் தொகையை அனுப்ப தாமதப் படுத்தவும் உடனே அனுப்ப வில்லை என்றால் நீ எனக்கு அனுப்பிய ஆபாச புகைப்படங்கள் ஆபாச மெசேஜ் எல்லாவற்றையும் உனது பெற்றோர் நண்பர்கள் உறவினர்களுக்கு அனுப்பி வைத்து விடுவேன் என்று மிரட்டி இருக்கிறார்.

இதனால் அதிர்ந்து போன அந்த இளம்பெண் சென்னை அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு சென்று இருக்கிறார். அந்த இளம்பெண் சென்னை அண்ணாநகர் மகளிர் விடுதியில் தங்கியிருந்து அப்பகுதியில் உள்ள பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

25 வயதாகும் ஆசிரியர் காவல் நிலையத்திற்கு சென்று மனோஜ்குமார் மீது புகார் கொடுத்துவிட்டு, புகாரின் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழியில்லை என்று சொல்ல போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து இருக்கிறார்கள்.

இதற்காக தனிப்படை அமைத்து தேனி மாவட்டம் கண்ணிசேர்வைபட்டி கிராமம் நடுத்தெருவிற்கு சென்று மனோஜ் குமாரை பிடித்தபோதுதான் அவர் முகநூலில் வைத்திருந்த படம் அழகான ஆண் படம் போலியானது என்றும், உண்மை முகம் தெரிய வந்திருக்கிறது.

இதை அந்த இளம் ஆசிரியருக்கும் போலீசார் தெரிவித்து இருக்கிறார்கள். அப்போதுதான் தான் முழுவதுமாக ஏமாற்றப்பட்டதை உணர்ந்து இருக்கிறார்.

இந்த இளம் ஆசிரியை தன் வலையில் விழுத்தியது போல் மேலும் சில பெண்களிடம் பழகி அவர்களையும் தனது வலையில் வீழ்த்தி பணம் பறிக்கும் முயற்சியில் 10 சிம் கார்டுகளுக்கு மேலும் வாங்கி வைத்திருந்திருக்கிறார். அவற்றை போலீசார் பறிமுதல் செய்து அவரை சிறையில் அடைத்துள்ளனர்.