வளைகாப்புக்கு மறுநாள் நிறைமாத கர்ப்பிணி திடீரென உயிரிழந்த சோகம் : கதறும் குடும்பம்!!

515

சேலம்….

சேலம் சின்னத்திருப்பதியை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 35). இவர் ஜங்ஷன் பகுதியில் உள்ள வங்கி ஒன்றில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.

இவருடைய மனைவி தமிழரசி (வயது 32). இவர்களுக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

இந்த நிலையில் தமிழரசி சில மாதங்ளுக்கு முன்பு கர்ப்பம் தரித்தார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவருக்கு நேற்று முன்தினம் ராஜேஷின் வீட்டில் வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை அடுத்து இரவு 11 மணியளவில் கர்ப்பிணியான தமிழரசிக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

உடனே அவரை குடும்பத்தினர் அருகில் உள்ல தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது அவரது குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து கன்னங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். நிறைமாத கர்ப்பிணிக்கு வளைகாப்பு நடத்திய மறுநாளே அவர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்ைத ஏற்படுத்தியது.