வழக்கத்திற்கு மாறாக பிறந்த நாளை கோலாகலமாக கொண்டாடிய பிரித்தானிய ராணி!!

528

பிரித்தானியாவின் ராணியான இரண்டாம் எலிசபெத், தனது 92வது பிறந்த நாளை வழக்கத்திற்கு மாறாக கோலாகலமாக கொண்டாடியுள்ளார்.பிரித்தானியாவில் இரண்டாம் எலிசபெத் 66 ஆண்டுகளாக ராணியாக உள்ளார். இதன்மூலம் உலகின் மிக வயதான, நீண்ட காலம் ராணியாக இருக்கும் பெருமையை அவர் பெற்றுள்ளார்.

கடந்த 1926ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி பிறந்த இவர், 1952ஆம் ஆண்டில் பிரித்தானியாவின் ராணியாக பதவியேற்றார்.தனது பிறந்த நாளை எப்போது பெரிதாக கொண்டாட விரும்பாத ராணி எலிசபெத், தற்போது தனது 92வது பிறந்த நாளை கோலாகலமாக கொண்டாடியுள்ளார்.

லண்டனில் நடைபெற்ற இந்த பிறந்த நாள் விழாவில் இசைக் கலைஞர்களின் கச்சேரி நடைபெற்றது. இதில் பிரபல இசைக்கலைஞர்களான டாம் ஜோன்ஸ், கெய்லி மினோக், ஸ்டிங் ஆகியோர் கலந்து கொண்டு கச்சேரி நடத்தினர். மேலும், அரச குடும்பத்தினர் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.