ஹன்சிகா..
மாப்பிள்ளை படம் மூலம் தனுஷுடன் சேர்ந்து அறிமுகமானவர் ஹன்சிகா மோத்வானி. தமிழ் சினிமா ரசிகர்கள் அவரை ‘சின்ன குஷ்பூ’ என அழைக்கும் அளவுக்கு வளர்ந்தார்.
ஜெயம் ரவி, விஷால், தனுஷ், ஆர்யா என முன்னணி நடிகர்கள் பலருடனும் நடித்தார். வந்த வேகத்திலயே சீக்கிரம் மார்க்கெட்டை பிடித்தார்.
நடிகர் ஜெயம்ரவியுடன் மூன்று படங்கள் தொடர்ச்சியாக சேர்ந்து நடித்தார். அதன் மூலம் அந்த கால பிரபு குஷ்பு ஜோடி போல் இவர்களும் பேசப்பட்டனர். மேலும், அவரிடம் ரசிகர்களுக்கு பிடித்ததே அவரின் கொளுக் மொளுக் உடல்தான். ஆனால், இளைக்கிறேன் என்கிற பெயரில் உடலை ஒல்லிக்குச்சியாக மாற்றி அதிர்ச்சி கொடுத்தார்.
தொடர்ந்து பட வாய்ப்புகள் குறைந்த நிலையில் நடிகை நயன்தாரா பாணியில் சொந்தமாக “மகா” படம் தயாரித்து நடித்து வருகிறார். அந்த படத்தை விளம்பரப்படுத்தும் வகையில் சமூக வலைதளங்களில் தனது ஸ்லிமான கவர்ச்சி படங்களை வெளியிட்டு அதன் பலனாக தற்போது பல தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் இன்ஸ்டா மற்றும் ட்விட்டர் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் ஹன்சிகா தற்போது வெள்ளை நிற லாங்க் கவுனில் போட்டோ எடுத்து பதிவிட்டுள்ளார்.