வாயில் சூடு, மிளகாய் புகை நெடி.. சிறுமிக்கு தாயால் நடந்த கொடூரம் : நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்!!

621

பெரம்பலூர்….

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை திடீர் குப்பம் பகுதியை சேர்ந்த ராஜா மணிமேகலை தம்பதியரின் 10 வயது மகள்.

இவர் பள்ளியில் நேரடி வகுப்புகள் இல்லாததால் வீட்டில் இருந்து வந்துள்ளார். அவரது வீட்டில் இருந்த பணத்தை எடுத்து கடையில் திண்பண்டம் வாங்கி சாப்பிட்டு விளையாட்டு பிள்ளையாக இருந்துள்ளார்.

வீட்டில் பணம் இல்லாததால், கடந்த 6 -ஆம் தேதி பெரியப்பா முருகன் வீட்டில், இருந்த 70 ரூபாய் பணத்தை எடுத்து தின்பண்டம் வாங்கி சாப்பிட்டுள்ளது அந்த குழந்தை.

இதை அறிந்த சிறுமியின் தாயார் மணிமேகலையும், பெரியம்மா மல்லிகா இருவரும் சேர்ந்து சிறுமியை அடித்தும், வாயில் மற்றும் தொடையில் சூடு வைத்தும், நெருப்பில் மிளகாய் போட்டு புகை வைத்தும் கொடுமைப்படுத்தி உள்ளனர்.

இதனால் உடல் நிலை மோசமாக பாதிக்கப்பட்டு உள்ளூர் மெடிக்கலில் மருந்து வாங்கி கொடுத்தும் சரியாகததால், கிருஷ்ணாபுரத்தில் உள்ள வட்டார மருத்துவ மனைக்கு சிகிச்சைக்கு அழைத்து சென்றனர்.

அங்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் திருச்சி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நேற்று அதிகாலை 2 மணி அளவில் குழந்தை உயிரிழந்தார்.

இதுகுறித்து அரும்பாவூர் போலீசார் தாய் மணிமேகலை, பெரியம்மா மல்லிகா இருவரிடமும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.