வாய்ப்பு வாங்கி கொடுத்த நயன்தாராவுக்கே இந்த நிலைமையா?

402

நயன்தாரா..

தமிழ் சினிமாவில் தற்போது டாப் ஹீரோயின் என்றால் அது நயன்தாரா தான். தமிழ் மட்டுமல்லாது, தெலுங்கு ஹிந்தி ஆகிய மொழிகளிலும் முன்னனி நட்சத்திரங்களுடன் நடித்து வருகிறார். நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று தான் கொண்டிருக்கிறது.

பல வருடங்களாக முன்னணி நடிகையாக வலம் வருவதால், திரையுலகில் பலர் இவரது நண்பர்கள்.

அதனை பயன்படுத்தி சில வாய்ப்புகளை தனது காதலர் விக்னேஷ் சிவனுக்கு உருவாக்கியும் கொடுக்கிறார் என கூறப்படுகிறது.

அப்படித்தான் விக்னேஷ் சிவன் அஜித்திற்கு கதை கூறி ஓகே வாங்கினார். உடனே அதனை தயாரிப்பாளர் லைகா நிறுவனர் சுபாஷ்கரனுக்கு கூறி, உடனடியாக அதனை படமாக்கும் முயற்சியிலும் மேற்கொண்டார்.

அதன் காரணமாக அஜித்தின் 62வது திரைப்படம் பற்றிய அறிவிப்பு அதிகாரபூர்வமாக வெளியானது.

இதில் நயன்தாரா தான் ஹீரோயினாக நடிப்பார் என கூறப்பட்டது. ஆனால், பட அறிவிப்பு செய்தியில் விக்னேஷ் சிவன், அஜித், அனிருத் ஆகியோரது பெயர்கள் மட்டுமே இருந்தது. நயனதாரா பெயர் அதில் இல்லை.

நயன்தாரா தான் நடிப்பார் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. வாய்ப்பு வாங்கி கொடுத்த நயன்தாராவுக்கே இந்த நிலைமையா என கோலிவுட்டில் கிசுகிசுத்து வருகின்றனர்.