திரிபுரா…
திரிபுரா மாநிலம், காண்டேச்சேரா கிராமத்தில் கடந்த செவ்வாயன்று கோயில் திருவிழா நடைபெற்றுள்ளது. அப்போது அதே கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது 5 வயது குழந்தையுடன் கோயிலுக்கு சென்றுள்ளார்.
பின்னர், தனது மகளை கோயிலில் அமரவைத்துவிட்டு பிரசாதம் வாங்கி வரச்சென்றுள்ளார். பிறகு வந்துப் பார்த்தபோது தனது மகள் காணமானல் போனதைக்கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து கோயில் முழுவதும் தேடிப்பார்த்தும் சிறுமி கிடைக்கவில்லை.
மேலும் அதே கிராமத்தைச் சேர்ந்த மற்றொரு நபரும் மாயமானது தெரியவந்தது. இந்த நபர் மீது சந்தேகம் எழுந்ததால் அந்த நபரையும் கிராம மக்கள் தேடியுள்ளனர். பின்னர் அடுத்த நாள் காலை வனப்பகுதியில் சிறுமி ஆடையின்றி இருந்ததைப் பார்த்து அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். பிறகு அவரை மீட்டு மருத்துவமனைக்குக் கூட்டிச் சென்றனர்.
அங்குப் பரிசோதித்துப் பார்த்தபோது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. இதையடுத்து தலைமறைவாக இருந்த குற்றவாளியை அப்பகுதி பெண்கள் கண்டுபிடித்து அவரை மரத்தில் கட்டிவைத்து கற்களால் அடித்து கொலை செய்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிறுமியை வன்கொடுமை செய்த வாலிபரைப் பெண்கள் அடித்தே கொலை செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது