வாழைப்பழத்தில் எலி பேஸ்டை வைத்து கொடுத்து கொலை : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

334

தருமபுரி….

தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள மாம்பட்டியை சேர்ந்த முருகன் என்பவரின் மகள் ரேவதி. பட்டதாரியான ரேவதியும் கோபி நாதம்பட்டி கூட் ரோடு பகுதியை சேர்ந்த கார்த்திக் என்பவரும் காதலித்து வந்த நிலையில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

இவர்களுக்கு 3 வயதில் ஒரு மகளும், 11 மாதத்தில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது. கார்த்திக், ஓசூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில், ரேவதியிடம் அடிக்கடி கார்த்திக், வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்கு கார்த்திக் தாய் பழனியம்மாள், அக்கா ஆகியோர் உடந்தையாக இருந்துள்ளனர்.

இந்த நிலையில் கடந்த மாதம் நள்ளிரவில் பெற்றோர் வீட்டுக்கு சென்று நகை மற்றும் பணம் வாங்கி வா என்று கூறி ரேவதியை கார்த்திக் அடித்து உதைத்து வீட்டை விட்டு வளியே அனுப்பியிருக்கிறார்.

இதனால் குழந்தையுடன் ரேவதி, இரவு முழுவதும் வீட்டுக்கு வெளியே தவித்துள்ளார். இதுபற்றி கேள்விபட்ட ரேவதியின் பெற்றோர் வந்து அவரை மீட்டு அவர்களது வீட்டுக்கு கொண்டு சென்றனர். அதன் பின்னர் ரேவதி, பெற்றோர் வீட்டிலேயே இருந்து வந்தார். இதற்கிடையே கடந்த 3ந் தேதி ரேவதியை, குடும்பம் நடத்த கார்த்திக் அழைத்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த சனிக் கிழமை அன்று ரேவதி, அவரது அக்காள் பிரியாவுக்கு போன் செய்தார். அப்போது அவர், தான் வாழைப்பழம் சாப்பிட்டதாகவும், ஏதோ போல் உள்ளது என்று கூறியிருக்கிறார். இதனையடுத்து பிரியாவை தருமபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கார்த்திக், நேற்று மாலை பிரியாவுக்கு போன் செய்து, ‘ ரேவதி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனால் தருமபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளோம் என்று தெரிவித்தார். இதற்கிடையே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரேவதி, இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அதிர்ச்சியடைந்த ரேவதியின் அக்காள் பிரியா, மற்றும் உறவினர்கள் கோபிநாதம்பட்டி போலீசில் புகார் செய்தனர். அதில் வரதட்சணை கேட்டு ரேவதியை கார்த்திக் மற்றும் அவரது குடும்பத்தினர், வாழைப் பழத்தில் எலி பேஸ்டை வைத்து கொடுத்து கொலை செய்துள்ளனர். எனவே இதுபற்றி விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.