விஜய்யை அழகாக்கி பார்த்த கலைஞரை அழவைத்த சோகம்!

840

சினிமாவில் விஜய்க்கு எத்தனையோ ரசிகர்கள் இருக்கிறார்கள். அவருடன் சிலருக்கு பணியாற்றும் வாய்ப்பும் கிடைத்திருக்கிறது. ஆனால் அவருடன் பல படங்களில் பணியாற்றும் வாய்ப்பு என்றால் அதிர்ஷ்டம் தானே.அப்படியான ஒரு சிறப்பை பெற்றவர் ஆடை வடிவமைப்பாளர் சத்யா. பைரவா படத்தில் பொட்டு வைத்து சட்டை ஃபேமஸ் ஆனதற்கு இவர் தான் காரணம். இன்னும் பல சுவாரசியங்களை சொல்லிக்கொண்டே போகலாம்.

அண்மையில் அவர் புதிதாக துணிக்கடை திறந்தார். இதற்கு சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பல பிரபலங்கள் வருகை தந்தனர். அவருக்கு அவரின் அம்மா என்றால் மிகவும் பிரியமாம். தான் இப்படி ஒரு பிரபலமாக இருப்பதற்கு அம்மாவும் காரணாம் என ஏற்கனவே நேர்காணல்களில் பகரிந்துகொண்டார் சத்யா.அப்படியான அம்மாவை இழந்திருக்கிறார் அவர்.

கடந்த சில மணி நேரங்களுக்கு முன் தன் அம்மா இறந்துவிட்டார் என அவரே முக நூலில் பதிவிட்டுள்ளார். அரசு துறையில் பணியாற்றிய அவரின் அம்மா கடந்த வருடம் தான் ஓய்வு பெற்றாராம். இவர் ராமநாதபுரத்தில் வசித்து வருகிறார்.அவரின் குடும்பத்தாருக்கு சினிஉலகம் தன் வருத்தத்தை பதிவு செய்கிறது.