ஐஸ்வர்யா ராஜேஷ்..
தமிழ் திரையுலகில் முன்னனி நடிகைகளில் ஒருவர் ஐஸ்வர்யா ராஜேஷ். மேலும் திரை உலகில் நடிக்க தெரிந்த மிக சில நடிகைகளில் முக்கியமானவர். துணை நடிகையாக அறிமுகமாகி இவரது திறமையால் திரை உலகில் முக்கிய இடம் பிடித்தவர்.
அடுத்த வீட்டு பெண் போன்ற எதார்த்த அழகியான இவருக்கு நடிப்பு திறமை இயற்கையாக அமைந்தது.நடிகை ஐஸ்வர்யா ரஜேஷ் தொலைகாட்சி தொகுப்பாளராக மீடியா உலகிற்கு வந்த நிலையில்,
2010 ஆம் ஆண்டு திரை உலகிற்கு அறிமுகமானார், பல முன்னணி இயக்குனர்களின் படங்களில் நல்ல கதாபாத்திரங்களில் நடித்த இவருக்கு தென்னிந்திய திரை அரங்கு நல்ல வரவேற்பும், விருதுகள் கொடுத்து அங்கீகாரமும் அளித்தது.
2012ல் வெளியான அட்டகத்தி திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஆனால் அவர் பிரபலமானது இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்த காக்காமுட்டை திரைப்படம். அதன் பின்னர் அவருக்கு மளமளவென படவாய்ப்புகள் குவிய துவங்கியது.
செக்கச்சிவந்த வானம்,தர்மதுரை, கனா, வடசென்னை , நம்ம வீட்டுப் பிள்ளை உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்துள்ளார். சமூக வலைதளங்களில் எந்நேரமும் ஆக்டிவாக இருக்கும் ஐஸ்வர்யா அவ்வப்போது அவரது புகைப்படங்களை போட்டு ரசிகர்களை குஷிபடுத்துவார்.
இந்த நிலையில் அவரது கஸின் சிறுவனுடன் விதவிதமான ஸ்டைலில் செல்ஃபி எடுக்கும் வீடியோ ஒன்றை போஸ்ட் செய்துள்ளார். அதில் அவர் எதார்த்தமாக சிம்பிளாக இருக்கிறார். அதைபார்த்து ரசிகர்கள் கமென்ட் செய்து வருகிறார்கள்.
View this post on Instagram