பிரியா மணி..
சில படங்களில் நடித்திருந்தாலும் பருத்தி வீரன் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களிடம் பிரபலமானவர் ப்ரியா மணி. இப்படத்தில் முத்தழகு எனும் கதாபாத்திரத்தில் அவர் நடித்தார் என சொல்வதை விட வாழ்ந்தார் என்றுதான் சொல்ல வேண்டும்.
இப்படத்திற்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் அவர் பெற்றார். ஆனால், அவருடன் நடிக்க விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்கள் ஆசைப்படவில்லை. தமிழில் சரியான வாய்ப்புகள் அமையவில்லை என்பதால் தெலுங்கு மற்றும் கன்னட சினிமா பக்கம் சென்றார்.
மேலும், 2017ம் ஆண்டு முஸ்தபா ராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.அதன்பின் சினிமாவில் நடிக்கவில்லை.. தற்போது மீண்டும் இரண்டாவது இன்னிங்ஸ் ஆட முடிவெடுத்துள்ளார்.
சினிமா உலகை பொறுத்தவரை திருமணம் ஆகிவிட்டால் கதாநாயகி வாய்ப்பு கிடைக்காது என்பதால் உடல் எடையை குறைத்து ஸ்லிம் ஆகியதோடு, கவர்ச்சியாக போஸ் கொடுத்து போட்டோஷுட் நடத்தி புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில், வித்தியாசமான உடையில் போஸ் கொடுத்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளது.