பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் விமானம் புறப்பட தாமதமாவதாக கூறி விமான ஊழியரை தலையால் முட்டித்தள்ளிய பயணியை பொலிசார் வலுக்கட்டாயமாக வெளியேற்றியுள்ளனர்.
பாரிஸில் அமைந்துள்ள Charles de Gaulle விமான நிலையத்தில் இருந்து EasyJet விமானம் ஒன்று மல்லோர்கா தீவுகள் செல்ல தயார் நிலையில் இருந்துள்ளது.பயணிகள் அனைவரும் காத்திருந்த நிலையில் திடீரென்று விமானம் 2 மணி நேரம் தாமதமாக புறப்படும் என அறிவித்துள்ளனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த அந்த விமான பயணிகளில் சிலர் வரம்பு மீறியுள்ளனர்.ரத்து செய்யப்பட்ட விமானங்களில் முன்பதிவு செய்திருந்த பயணிகளுக்கு EasyJet விமான சேவை நிறுவனம் கட்டணத்தை திரும்ப வழங்கியிருந்தாலும்,
கடைசி நேரத்தில் வேறு விமானங்களை பதிவு செய்வதில் சிக்கல் ஏற்படுவதாக கூறி சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.ஒருகட்டத்தில் விமானத்தில் ரகளையை ஏற்படுத்த ஒருசிலர் முயன்றுள்ளனர். அதில் ஒருவர் விமான ஊழியரை தலையால் மூர்க்கத்தனமாக மோதியுள்ளார்.
இதனையடுத்து விமான ஊழியர்கள் பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கவும், விமான நிலைய காவலர்களுடன் வந்து அவர்களை விமானத்தில் இருந்து வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தியுள்ளனர்.
தற்போது இந்த வீடியோவானது சமூக வலைதளங்களில் பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
2 மணி நேரம் தாமதம் என அறிவித்த விமானமானது அடுத்த நாள் காலை 11 மணிக்கு புறப்படும் என அறிவித்ததன் காரணமாகவே பயணிகள் ரகளையில் ஈடுபட்டுள்ளனர்.
பிரான்சில் போராட்டம் காரணமாக சுமார் 300 விமானங்கள் ரத்தாகியுள்ளதால் ஆயிரக்கணக்கான பயணிகள் செய்வதறியாது தவித்து வருகின்றனர்.