விமான நிலைய ஓடுபாதையில் அரை நிர்வாணத்துடன் ஓடி வந்த இளைஞர் : பின்னர் நடந்த பரபரப்பு சம்பவம்!!

698

அமெரிக்காவில் விமான நிலைய ஓடுபாதையில் அரைநிர்வாணத்துடன் ஓடிய இளைஞர், விமானத்தின் கதவை திறக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

அமெரிக்காவின் அட்லாண்டா நகரில் ஹார்ட்ஃபீல்ட்-ஜாக்சன் சர்வதேச விமான நிலையம் உள்ளது. உலகின் மிகவும் பரபரப்பாக இயங்கும் விமான நிலையமாக கருதப்படும் இங்கு, இரு தினங்களுக்கு முன்னர் இளைஞர் ஒருவர் கம்பி வேலியை தாண்டி ஓடுபாதைக்கு வந்துள்ளார்.

அரைநிர்வாண கோலத்தில் இருந்த அவர், விமானத்தை நெருங்கி அதில் உள்ளவர்களிடம் ரகளையில் ஈடுபட்டுள்ளார். மேலும், விமானத்தின் அவசர கால கதவையும் திறக்க முயன்றுள்ளார்.

அதனைத் தொடர்ந்து, விமான நிலைய பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அங்கு வந்த பொலிசார், ரகளையில் ஈடுபட்ட இளைஞர் கைது செய்தனர்.

பின்னர் பொலிசார் நடத்திய விசாரணையில் குறித்த இளைஞரின் பெயர் ஜிரின் ஜோன்ஸ்(19) என்பதும், அவர் விமான நிலையத்தை ஒட்டி கட்டுமான பணி நடக்கும் பகுதியில் இருந்து, வேலியை தாண்டி குதித்து உள்ளே வந்திருப்பதும் தெரிய வந்தது.

அதன் பின்னர், அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இவர் ஏற்கனவே இரண்டு முறை சிறு சிறு தவறுகளுக்காக, அலபாமாவில் கைது செய்யப்பட்டிருந்தார் என்பது தெரிய வந்துள்ளது.