விளையாடி கொண்டிருந்த 4 வயது பெண் குழந்தை துடி துடித்து பரிதாபமாக பலி : கதறும் பெற்றோர்!!

288

புதுச்சேரி….

புதுச்சேரியை அடுத்த லாஸ்பேட்டை தாகூர் நகரை சேர்ந்த சேர்ந்தவர் அருணகிரி. இவர் விழுப்புரம் மாவட்டம் பொம்மையார் பாளையம் கிராமத்தில் நாராயணி என்று தங்கும் விடுதியில் கூலிவேலை செய்து வருகிறார். இவரது நான்கு வயது மகள் ரூபிஷேரிங்.

சம்பவத்தன்று இவர் தனது மகளை அழைத்துக்கொண்டு பணிக்கு சென்றுள்ளார். சிறுமி தங்கும் விடுதியில் விளையாடிக்கொண்டிருந்தார். அருணகிரி தனது வேலையை பார்த்து வந்துள்ளார்.

குழந்தை விளையாடிக்கொண்டிருந்ததால் அங்கு விட்டுவிட்டு பக்கத்தில் இருந்த கடைக்கு சென்றுள்ளார்.

கடையில் இருந்து திரும்பி வந்து பார்த்தபோது குழந்தையை காணவில்லை. இதனால் பதற்றமடைந்தவர் தங்கும்விடுதி முழுவதும் சிறுமியை தேடி அழைந்துள்ளார். அப்போது அங்குள்ள நீச்சல் குளத்தில் சிறுமி இறந்த நிலையில் கிடந்துள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக கோட்டக்குப்பம் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார் சிறுமியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனை மேற்கொள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.