ஹம்சி சிறீதரன்..
பருத்தித்துறை -புலோலி,சாரையடி பகுதியில் ஜன்னல் கதவின் பிணைச்சலில் கழுத்துப் பட்டியை கட்டி கழுத்தில் சு ருக்கிட்டுக் கொண்ட சிறுமியொருவர் பரிதாபமாக உ யிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சிறுமி விளையாட்டாக தனது சகோதரனின் கழுத்துப் பட்டியை யன்னல் கம்பியில் கட்டி இவ்வாறு கழுத்தில் சு ருக்கிட்டுள்ளதாக திடீர் இ றப்பு விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பருத்தித்துறை- புலோலி,சாரையடியைச் சேர்ந்த ஹம்சி சிறீதரன் (வயது-9) என்ற சிறுமியே இவ்வாறு உ யிரிழந்துள்ளார். வீட்டில் யாரும் இல்லாத போது தனிமையில் இருந்த மாணவி சகோதரனின் கழுத்துப் பட்டியை எடுத்து அவரது உயர மட்டத்தில் காணப்பட்ட யன்னல் பிணைச்சலில் கட்டி கழுத்தில் சு ருக்கிட்டுள்ளார்.
இதன்போது சுருக்கு இறுகி மாணவி உ யிரிழந்துள்ளதாக விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது. மேலும் கழுத்தில் பட்டி இறுகிக்கொண்டதன் காரணமாகவே சிறுமி உ யிரிழந்துள்ளதாக உடற்கூற்றுப் பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.