வீட்டிற்கு தெரியாமல் காதலன் உடன் சென்ற இளம்பெண் : மனமுடைந்த தந்தைக்கு நேர்ந்த விபரீதம்!!

257

சென்னை..

சென்னை கொளத்தூரில், இளம்பெண் அவரது காதலனுடன் சென்று விட்டதால் மனமுடைந்த தந்தை, தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொளத்தூர் பகுதியில் உள்ள கண்ணகி நகரைச் சேர்ந்தவர் ஐயப்பன். இவருடைய மகள் கடைக்குச் செல்வதாக கூறிவிட்டு வெளியே சென்றுள்ளார்.

ஆனால், நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு திரும்பாததால் சந்தேகமடைந்த ஐயப்பன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அதன் பேரில் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், பக்கத்து வீட்டில் வசிக்கும் குமார் என்பவரை காதலித்து வந்த இளம்பெண்,

காதலனுடன் சென்றுவிட்டது தெரியவந்தது. இதனால், மனமுடைந்த ஐயப்பன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.