வீட்டில் சமைத்து கொண்டிருந்த பெண் சில நிமிடங்களில் சுருண்டு விழுந்து உயிரிழந்த பரிதாபம்!!

428

இந்தியாவில்..

இந்தியாவில் விஷப்பாம்பு கடித்ததில் பெண்ணொருவர் வீட்டிலேயே உயிரிழந்துள்ளார். உத்தரபிரதேசத்தின் கவுசம்பியை சேர்ந்தவர் அப்ரோஸ் மெயின். பழ வியாபாரி.

இவரின் தாயார் மஜுதின் பேகம். பேகம் நேற்று வீட்டில் சமைத்து கொண்டிருந்தார். அப்போது அவர் காலில் ஏதோ ஒன்று சீண்டி விட்டு சென்றது.

முதலில் அதை பேகம் பெரிதாக எடுத்து கொள்ளாத நிலையில் பின்னர் கடுமையான வலி ஏற்பட்ட பின்னரே தன்னை பாம்பு கடித்தது என்பதை உணர்ந்தார். இது குறித்து உடனடியாக தனது குடும்பத்தாருக்கு போனில் தகவல் கொடுத்தார்.

சிறிது நேரத்தில் பேகம் கீழே சுருண்டு விழுந்த நிலையில் குடும்பத்தார் வந்து மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர். அங்கு பேகமை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இது அவர் குடும்பத்தாரை அதிர்ச்சியடைய செய்தது, பின்னர் பேகம் சடலத்தை கொண்டு சென்ற அவர் மகன் மெயின் கண்ணீர் மல்க இறுதிச்சடங்குகளை செய்தது காண்போர் கண்களை குளமாக்கியது.