வீட்டில் ச டலமாக கிடந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர்! வெளிநாட்டில் இருந்து வந்தவர்களுக்கு நடந்தது என்ன? பகீர் தகவல்!!

315

இந்தியாவில்……..

இந்தியாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் வீட்டுக்குள் சடலமாக கிடந்த நிலையில் பிரேத பரிசோதனை அறிக்கையில் அ திர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் அடுத்த லோட்தா கிராமத்தில் கேவல்ராம் என்பவரின் குடும்பம் வசித்து வந்தது. பாகிஸ்தானில் இருந்து ராஜஸ்தானுக்கு வந்தவர்கள் தங்களிடம் இருந்த பணத்தை கொண்டு பண்ணை ஒன்றை விலைக்கு வாங்கி அதில் விவசாயம் செய்து வந்தனர்.

பண்ணையின் ஒரு பக்கத்தில் ஒரு சிறிய வீடு ஒன்றை அமைத்திருந்தனர். சம்பவத்தன்று இரவு வீட்டிற்கு வெளியில் படுத்திருந்த கேவல் ராம் காலையில் கண்விழித்து பார்த்த போது தோட்டத்திற்குள் சில மாடுகள் மேய்ந்து கொண்டிருந்தன.

இதை கண்ட அவர் அதனை விரட்டி விட்டு வீட்டில் உள்ளவர்கள் என்ன செய்து கொண்டிருக்கின்றனர் என சத்தமிட்டவாறே வீட்டுக்குள் சென்று பார்த்துள்ளார். அப்போது வீட்டுக்குள் படுத்திருந்த கேவல்ராமின் தந்தை புதாராம், தாய் அந்தரா தேவி 4 சகோதர, சகோதரிகள், 5 குழந்தைகள் என 11 பேரும் பேச்சு மூச்சில்லாமல் சடலமாக கிடப்பதை கண்டு அ திர்ச்சி அடைந்தார்.

உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சடலமாக கிடந்த இடத்தின் அருகே சில காலி மருந்து பாட்டில்கள் மற்றும் ஊசி போடும் சிரிஞ்சுகள் கிடந்தன. மேலும் உயிரிழந்த அனைவரது கைகளிலும் ஏதோ ஊசி போட்டது போல தழும்பு காணப்பட்டது.

இதையடுத்து அவர்களின் சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இதன் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் 11 பேரின் உடலிலும் ஒரு நச்சு பொருள் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்களில் 5 பேர் சிறுவர், சிறுமிகள் ஆவார்கள். இதற்கிடையில் கேவல்ராம், தன்னை விட்டு பிரிந்து வாழும் தனது மனைவி ஒரு செவிலியர் என்றும் அவரது தூண்டுதலின் பேரில் தனது குடும்பத்தை சேர்ந்த 11 பேருக்கும் விஷ ஊசி போடப்பட்டிருக்கலாம் என்றும் புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து கேவல்ராமின் மனைவி மற்றும் சிலரை பொலிசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையில் சம்பவம் நடந்த வீட்டில் கிடைத்த குறிப்பில், உறவினர்களால் தங்கள் உயிருக்கு ஆபத்து இருப்பதாக எழுதப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடந்து வரும் நிலையில் மேலும் பல எதிர்பார்க்காத தகவல் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.