வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சிறுமியை துஷ்பிரயோகம் செய்த கொடூரன் : கர்ப்பமான பரிதாபம்!!

644

தமிழகத்தில் ஆசிட் வீசி விடுவேன் என்று கூறி சிறுமியை மிரட்டி பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

கோவை மாவட்டத்தைச் சேர்ந்த குமார் என்பவர் அதே பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமியை ஆசிட் வீசுவிடுவேன் என்று மிரட்டி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.

இதனால் அந்த சிறுமி தற்போது கர்ப்பமானதை அறிந்த பெற்றோர் அதிர்ச்சியடைந்து கேட்ட போது நடந்தவற்றை கூறியதால், அவர்கள் உடனடியாக மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

அதன் பின் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த பொலிசார், போக்சோ சட்டத்தின் கீழ் குமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.