வீட்டை விட்டு திடீரென ஓடிப்போன இளம் நடிகை : வெளியான அதிர்ச்சி தகவல்!!

651

நிரிஷா பாஸ்னெட்…

சினிமாவில் நடிக்க வேண்டும் என்பதற்காகத்தான் வீட்டை விட்டு ஓடி வந்து விட்டதாக இளம் நடிகை ஒருவர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சினிமாவில் நடிக்க வேண்டும் என்பதற்காக பல இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் வீட்டை விட்டு ஓடிவந்து முயற்சி எடுத்து வருகின்றனர் என்பதை அவ்வப்போது பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் நேபாளத்தைச் சேர்ந்த நடிகை நிரிஷா பாஸ்னெட் என்பவர் தான் வீட்டை விட்டு மும்பைக்கு ஓடி வந்து சினிமா வாய்ப்பை தேடியதாக பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

தனக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்பது சிறு வயதிலிருந்தே கனவு என்றும் அந்த கனவை நிறைவேற்றுவதற்காக ஒரு கட்டத்தில் நேபாளத்தில் உள்ள காத்மண்டுவில் இருக்கும் எனது வீட்டில் இருந்து மும்பைக்கு ஓடி வந்து விட்டேன் என்றும்,

மும்பையில் எனக்கு யாரையும் தெரியாது என்றாலும் கொஞ்சம் பணம் மற்றும் நிறைய நம்பிக்கையுடன் காத்து இருந்தேன் என்றும் என்னுடைய காத்திருப்பு வீண் போகாமல் தொலைக்காட்சி தொடரில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது என்றும் கூறினார்.

தனக்கு கிடைத்த முதல் வாய்ப்பில் தனக்கு கிடைத்த சித்ரா என்ற கதாபாத்திரம் மிகுந்த மகிழ்ச்சி அளித்ததாகவும் உண்மையாகவே என்னுடைய கேரக்டர் போலவே அந்த கதாபாத்திரமும் இருந்தது என்றும் அதனால் நடிப்பதற்காக பெரிய அளவில் மெனக்கெடவில்லை என்றும் கூறியுள்ளார்.

எனக்கு மும்பையில் என்னுடன் பணிபுரியும் பணியாளர்கள் தவிர வேறு யாரையும் தெரியாது என்றாலும் என்மீது எனக்கு இருக்கும் நம்பிக்கை தான் இந்த அளவிற்கு என்னை உயர்த்தி உள்ளது என்றும் எனது சினிமா வேலையை நான் மகிழ்ச்சியுடன் செய்து கொண்டிருக்கின்றேன் என்றும் நடிகை நிரிஷா பாஸ்னெ அந்த பேட்டியில் கூறியுள்ளார்.