வீதியில் அனாதையாக இறந்து கிடந்த நபர் : உறவினர்கள் இருந்தும் கொரோனாவால் நடந்த துயரம்!!

651

கொரோனாவால்..

தமிழகத்தில் அக்கா, உறவினர்கள் இருந்த போதும், கொரோனா சந்தேகத்தில் நபர் ஒருவர் சாலையில் அனாதையாக இறந்து கிடந்த துயரம் மிகுந்த சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக இந்தியா முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவு வரும் 3ம் திகதி வரை உள்ளது. இதன் காரணமாக தினந்தோறும் சம்பாதிக்கும் கூலித் தொழிலாளர்கள் கடும் அவஸ்தை பட்டு வருகின்றனர்.

அரசு குடும்ப அட்டை உள்ளவர்களுக்கே நிவாரணம் கொடுக்கும், சாலைகளில் திரியும் நபர்களுக்கு நிவாரணம் கொடுப்பதில்லை.

இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் வாழ்ந்து வந்தவர் தான், ரவி (56). இவர் சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்தில் மூட்டை தூக்கும் பணியைச் செய்து வந்த நிலையில், ஊரடங்கு காரணமாக இவரின் வருமானம் நின்றுவிட்டது. இதனால் வேறு வழியின்றி, சைதாப்பேட்டையை அடுத்த ஜாபர்கான் பேட்டையில் உள்ள தன்னுடைய அக்கா வீட்டிற்கு சென்றுள்ளார்.

ஆனால், அந்த அக்காவும், இவரை அந்தளவிற்கு மகிழ்ச்சியுடன் வரவேற்கவில்லை. ரவிக்கு ஆஸ்துமா பிரச்சனை இருப்பதனால் அடிக்கடி இருமியுள்ளார். இதைக் கண்ட அந்த வீட்டின் உரிமையாளர, ரவியின் அக்காவிடம் இவருக்கு கொரோனா இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளதாக கூறியுள்ளார்.

இதையடுத்து சென்னை மாநகராட்சிக்கு தொடர்பு கொண்டதால், அதிகாரிகள் வந்து சோதனை செய்து, சளி மாதிரியை எடுத்துக் கொண்டு, அவரை வெளியில் வரக்கூடாது என அறிவுறுத்தி, மீண்டும் வீட்டுக்கு அனுப்பியுள்ளனர்.

ஆனால் வீட்டின் உரிமையாளர் அனுமதிக்காத காரணத்தினால், ரவி அங்கிருக்கும் பிளாட்பாரத்தில் தங்கியுள்ளார். அவ்வப்போது யாரேனும் கொண்டு வந்து கொடுக்கும் உணவினை சாப்பிட்டு வந்துள்ளார். ஒரு சில நாட்களில் உணவு கிடைக்காததால், பசியுடனும் படுத்து வந்துள்ளார்.

இதனால் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட அவர், நேற்று காலை பரிதாபமாக உ யிரிழந்தார். இந்த தகவல் பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதால், அவரின் உடலை மீட்ட பொலிசார் இது குறித்து விசாரித்து வருகின்றனர்.