வெண்டிலேட்டர் கோளாறால் இளம் பெண்ணுக்கு அரங்கேறிய சோகம்: கணவர் போலீசில் புகார்!!

288

கன்னியாகுமரி……….

ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் வெண்டிலேட்டர் கோளாறு காரணமாக இளம்பெண் உயிரிழந்ததாக அவரது கணவர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

குமரி மாவட்டம் தக்கலை அருகே இலவியார் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் பாபு (36). இவரது மனைவி ரேவதி(35). இவர் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு குட்டக்குளியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

பின்னர், மேல் சிகிச்சைக்காக கடந்த 21ஆம் தேதி நாகர்கோவில் அருகே உள்ள ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று அவருக்கு அளிக்கப்பட்டு வந்த ஆக்ஸிஜன் வெண்டிலேட்டரில் கோளாறு ஏற்பட்டதாகவும், இதனால் மூச்சுத் திணறி ரேவதி இறந்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து அவரது கணவர் பாபு ஆசாரிப்பள்ளம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அந்த புகாரின் அடிப்படையில் நேசமணி நகர் காவல் ஆய்வாளர் பத்மாவதி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.