கடந்த 2016 ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியான முங்கரு மலே2 படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார் நடிகை ஷில்பா மஞ்சுநாத்.இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதன் பிறகு இவர் மலையாளத்தில் ரோசாப்பூ படத்தின் மூலம் அறிமுகமானார்.
இந்த படத்தின் மூலம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார்.பின்னர் இவர் 2018 ஆம் ஆண்டு விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான காளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் 1992 ஆம் ஆண்டு பெங்களூரில் பிறந்தார்.இவர் தனது கல்லூரி படிப்பை பெங்களூரில் முடித்தார்.பின்னர் மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார்.
இவர் 2013 ஆம் ஆண்டு கர்நாடகா அழகி போட்டியில் பங்கேற்று மிஸ் கர்நாடகா பட்டத்தை வென்றுள்ளார்.இவருக்கு சினிமாவின் மீது உள்ள ஆர்வத்தால் திரைத்துறையில் வாய்ப்புகளை தேடி வந்தார்.இவர் மாடலிங் மற்றும் விளம்பரங்களில் நடித்து வந்தார். பின்னர் முங்கரு மலே2 என்ற கன்னட படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
இவர் தமிழில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான காளி படத்தின் மூலம் அறிமுகமானார்.இந்த திரைப்படம் வெற்றி படமாக அமையவில்லை. பின்னர் 2019 ஆம் ஆண்டு ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இந்த திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.பின்னர் பேரழகி ஐ எஸ் ஓ ,தேவதாஸ் பிரதர்ஸ் போன்ற படத்திலும் நடித்துள்ளார்.
தற்போது ரங்கா B.E M.Tech என்ற கன்னட படத்திலும், தமிழில் பெயரிடாத ஒரு படத்திலும் நடித்து வருகிறார்.இவர் சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார். இவர் அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.