பங்குச் சந்தை…
தீபாவளி தினத்தில் ஒருவர் கோடிக்கணக்கில் சம்பாதித்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
முன்பு எப்போதும் இல்லாத வகையில் இன்றைய காலகட்டத்தில் பலரும் பங்குச் சந்தையில் முதலீடு செய்து வருகின்றனர்.
அதோடு, பங்குசந்தையில் தாங்கள் வைத்துள்ள பங்கிட்டின் விலை உயரும் போது அதை விற்றால் கொள்ளை லாபத்தை அள்ளலாம்.
இது பண்டிகைக் காலங்களில் பல மடங்கு அதிகரிக்கும். இந்நிலையில் தீபாவளியன்று பங்குச்சந்தையில் சிறப்பு வர்த்தகம் நடைபெற்றது. அதோடு, அந்த நாளில் ஒரே ஒரு நபர் மட்டும் ஒரு மணி நேரத்தில் நூறு கோடி முதல் லாபத்தை ஈட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்பத்தியுள்ளது.
பங்குசந்தையில் சில நுணுக்கங்கள் தெரிந்தால் மட்டுமே நம்முடைய லாபம் அதிகரிக்கும்.
அவ்வாறு பங்குச்சந்தை வர்த்தகத்தில் ஊறிய முன்னணி முதலீட்டாளரான ராகேஷ் ஜூன்ஜூன்வாலா என்பவர் தீபாவளி தினத்தில் முகூர்த்த நேரமான மாலை 6:15 முதல் 7:15 மணி வரை மட்டுமே சிறப்பு வர்த்தகத்தில் ரூ.101 கோடி சம்பாதித்துள்ளார்.
அவர் வைத்திருந்த ஷேர்ரின் மதிப்பு அந்த நேரத்தில் அதிகரித்த நிலையில் அவருக்கு இந்த ஆதாயம் கிடைத்துள்ளது.
இந்தியன் ஹோட்டல்ஸ். டாடா மோட்டார்ஸ், கிரிசில் நிறுவன பங்குகளின் ஏற்றமே அவருக்கு லாபமாக அமைந்ததாக கூறப்படுகிறது.