வெளிநாடு செல்ல ஆசைப்படும் மாணவர்கள்தான் டார்கெட் : தம்பதிகள் செய்த மோ.சமான செயல்!!

461

வெங்கடேஷ்

சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ். இவர் ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங் படித்துவிட்டு மேற்படிப்புக்காக இங்கிலாந்தில் உள்ள சவுத் வேல்ஸ் யூனிவர்சிட்டியில் சேர்வதற்கான முயற்சிகள் எடுத்துக் கொண்டு வந்துள்ளார்.

இந்த நிலையில் இவரது தூரத்து உறவினர்களான செளகார்த்திகா மற்றும் அவரது கணவர் கார்த்தி ஆகியோர் தாங்கள் ரித்விக் என்ற நிறுவனம் நடத்தி வருவதாகவும், அதன் மூலம் அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, பிரான்ஸ், ரஷ்யா, சீனா போன்ற நாடுகளில் உள்ள புகழ்பெற்ற கல்லூரிகளில் மாணவர்களை சேர்த்து வருவதாகவும் அதன்படியே வெங்கடேஷையும் இங்கிலாந்தில் உள்ள சவுத் வேல்ஸ் யூனிவர்சிட்டியில் சேர்த்து விடுவதாக கூறியுள்ளனர்.

இதை நம்பிய வெங்கடேஷ் கடந்த 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து தவணை முறையில் ரூபாய் 38 லட்சம் பணத்தை செளகார்த்திகா மற்றும் அவரது கணவர் கார்த்திக்கிடம் கொடுத்துள்ளார்.

பின்னர் சௌகார்த்திகா மற்றும் கார்த்திக் ஆகியோர் இங்கிலாந்தில் உள்ள வேல்ஸ் யுனிவர்சிட்டியில் வெங்கடேஷ் படிப்பதற்கான மாஸ்டர் டிகிரி ஏரோநாட்டிக்கல் படிப்புக்கான அட்மிஷன் கிடைத்துவிட்டதாக அதற்கான ஆவணங்கள் மற்றும் இங்கிலாந்து நாட்டுக்கான வீசா ஆகியவற்றை கொடுத்துள்ளனர்.

வெங்கடேஷ் அதனை சோதனை செய்து பார்த்தபோது அவை அனைத்தும் போ.லி என்பது தெரியவந்தது.

இதனைத்தொடர்ந்து செளகார்த்திகா மற்றும் கார்த்திக்கை தொடர்பு கொண்டபோது அவர்கள் தங்களது செல்போனை சுவிட்ச் ஆஃப் செ.ய்.துவிட்டு தலைமறைவாகி இருப்பது தெரியவந்தது.இதனையடுத்து கடந்த 2020ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வெங்கடேஷ் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் இச்சம்பவம் குறித்து புகார் அளித்தார்.

விருகம்பாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் செளகார்த்திகா மற்றும் அவரது கணவர் கார்த்திக் ஆகியோர் வெளிநாடு சென்று படிக்க முயற்சித்து வரும் மாணவர்களை குறிவைத்து ஏ.மா.ற்றி வருவதும், அதன்மூலம் அவர்களிடமிருந்து கோடிக்கணக்கான ரூபாய்களை ஏமாற்றி இருப்பதும் தெரியவந்தது.

இதனையடுத்து செளகார்த்திகா மற்றும் அவரது கணவர் கார்த்திக் மீது விருகம்பாக்கம் போலீசார் நம்பிக்கை மோ.ச.டி மற்றும் மோ.ச.டி செய்தல் ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கணவன் மனைவியை தேடி வந்தனர்.

இந்த நிலையில் விருகம்பாக்கம் போலீசார் கார்த்திக்கை கைது செய்து சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளியான செளகார்த்திகாவை போலீசார் தேடி வருகின்றனர்.